பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் 165 விழாப் பொறுப்பாளராக, அப்போது டாக்டர் அவ்வை நடராசன் இருந்தார். நான், அப்துல்ரகுமான், மீரா, சிற்பி, சக்திக்கனல், சிதம்பரநாதன என்று கவிஞர் பட்டாளமே ஆண்டுதோறும் அங்குக் கூடுவதுண்டு. திருமண மண்டபத்துக்கு எதிரில் உள்ள நியூ உட்லண்டஸ்’ தங்கும் விடுதியில் எங்கட்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். மூன்று நாள்கள் தங்கியிருந்து அருட்செல்வர் செலவில் ஆனந்தமாக விழாவைக் கண்டு கழித்துவிட்டுத் திரும்புவோம். - கவியரங்கத் தலைமைக்குத் திருலோக சீதாராம் அழைக்கப்பட்டிருந்தார். உடல் தளர்ந்த நிலையில் மகன் துணையோடு வந்திருந்தார். இரவில் வயிற்றுப்போக்கு. மருத்துவரை அனுப்பி அவரைக் கவனிக்கும்படி விழாக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். அடுத்த நாள் முற்பகலில் கவியரங்கத் தலைமையேற்று நிறைவு செய்தார் திருலோகம். - இக்கவியரங்கில் அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவராக இருந்த வைரமுத்துவும் கலந்து கொண்டார். எதிர்காலத்தில் வைரமுத்து சிறந்த கவிஞராக மாறுவார் என்பதற்கு அவர் பாட்டு வரிகளில் மின்னிச் சிதறிய சில உருவகங்கள், சொற்றொடராக்கங்கள் கட்டியம் கூறின. கவியரங்கம் முடிந்ததும் திருலோக சீதாராமைப் பார்த்து, எப்படி இருக்கிறீர் கவிஞரே? என்று கேட்டேன். “சருகு அரிப்பதிலேயே என் வாழ்நாள் கழிந்துவிட்டது. இன்னும் குளிர்காய முடியவில்லை!” என்று வருத்தத்தோடு சொன்னார். சென்னையிலிருந்து ஊர் திரும்பிய சில திங்களுக்குள் அவர் இறந்து விட்டதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்தது. - சில ஆண்டுகட்குப் பின் வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் திருச்சி சென்றிருந்தபோது, அங்கிருந்த நண்பர்களிடம் திருலோகத்தைப் பற்றிச் சில