பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 109 ஒரு விசையில் விரலை வைக்க, அவளை இறுகப் பிடித்திருந்த வில்களும் வளையங்களும் ஒரே நிமிஷத்தில் விலகி நாற்காலியில் தைக்கப்பட்டிருந்த மெத்தைக்குள் புதைபட்டு மறைந்து போயின. அவ்வாறு விடுபட்ட பூர்ணசந்திரோதயம் சடேரென்று அவ்விடத்தை விட்டு எழுந்து செத்தேன் பிழைத்தேன் என்று ஒரு பக்கமாக விலகி நின்றாள். உடனே மருங்காபுரி ஜெமீந்தார்.அவளிடம் நெருங்கி வந்து, 'கண்ணே கண்மணியே பூர்ணசந்திரோதயம் உன் விஷயத்தில் நான் இவ்வளவு தூரம் கொடுமையாக நடந்து கொண்டதைப் பற்றி என் மனம் உருகித் தவிக்கிறது. உன்னுடைய மன நிலைமையையும் யோக்கியதையையும் உள்ளபடி அறிந்து கொள்ளாமல் நான் நடந்து கொண்டதை நீ மனசில் வைக்காமல், எல்லாவற்றையும் மறந்து என்னைக் காப்பாற்றி ரrக்க வேண்டும்' என்றுகூறிக் கெஞ்சி மன்றாடிய வண்ணம் அந்த மின்னாளிடம் நெருங்கி, அவளது இடையில் தமது இடக்கரத்தைக் கொடுத்து வளைத்து அவளைக் கட்டித் தழுவ முயன்றார். அவருக்கு இடங்கொடுப்பவள் போலப் பாசாங்கு செய்து சிறிது நேரம் பொறுமையாக இருந்த பூர்ணசந்திரோதயம், “மன்மதனும் ரதிதேவியும் இருந்து லீலைகள் செய்யத் தகுந்த இடம் போல இருக்கும் இந்த அற்புத மோகன மணி மண்டபத்தில் இப்படிப்பட்ட பயங்கரமான நாற்காலிகளைத் தாங்கள் வைத்தது கொஞ்சமும் தகாது' என்று கூறியவண்ணம் தனது முழுபலத்தோடு அவரது இரண்டு கைகளையும் பிடித்து இழுத்து ஒரே விசையாகவும் பலமாகவும் அவரை அந்த நாற்காலியின்மேல் தள்ளிவிட அவர் தளர்ந்து போன வலுவற்ற மனிதர் ஆகையால், அவள் சற்று முன் அகப்பட்டுக் கொண்டிருந்த நாற்காலியில் போய் பொத்தென்று விழுந்தார். விழுந்தவுடனே அந்த நாற்காலியில் மறைந்திருந்தவில்வைத்த ஆறு வளையல்களும் குபிர் என்று எழுந்து வந்து அவரது