பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பூர்ணசந்திரோதயம்-2 கந்தன், 'ஆம்; புது சிநேகந்தான். மனிதன் நம்பிக்கைக்குப் பாத்திரமான நல்ல குணமுடையவன். இவன் இருப்பது தஞ்சாவூர் ஆட்டுமந்தைத் தெருவாம்; வாண்டையாச் சாதியைச் சேர்ந்தவன். நம்முடைய காரியங்களுக்கு நன்றாக உபயோகப்படக் கூடியவன். ஆகையால் இவனைச் சிநேகம் பிடித்தேன்; அன்னத்தம்மாள் வீட்டுக்கொள்ளைக்கு நமக்கு அநேக ஆள்கள் வேண்டுமல்லவா? அதற்காகவும் இவனைப் பிடித்தேன்; நம்முடைய இஷ்டப்படி நடந்து கொள்ளுவதாக இவனும் ஒப்புக் கொண்டிருக்கிறான். இந்தக் கொள்ளை விஷயமும் இவனிடத்தில் பிரஸ்தாபித்தேன். இவன் சரிதான் என்று ஒப்புக் கொண்டிருக்கிறான். இவனை எழுப்புகிறேன். நீ வேண்டுமானால் இவனோடு பேசிப் பார்' என்றான். அந்த வரலாற்றைக் கேட்ட கட்டாரித்தேவன், “சரி; இருக்கட்டும். நீ சொன்னால் அது தவறாக இருக்காது. தூங்குகிறவனை எழுப்ப வேண்டாம். ஆனால், இவன் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனா, அல்லது ரகசியங்களை வெளியிடக் கூடியவனா என்பதை நாம் நன்றாக உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆட்டு மந்தைத் தெருவில் வாண்டையாச் சாதியான் யார் இருக்கிறான்! எனக்குத் தெரிந்திருக்க வேண்டுமே இருக்கட்டும்; வீட்டுக்குள் போய் ஒரு விளக்கு எடுத்துக்கொண்டு வா; ஒருவேளை இவன் எனக்குத் தெரிந்தவனாக இருக்குமோ என்று பார்க்கிறேன்' என்றான். உடனே கந்தன் விளக்கை எடுத்துக்கொண்டு வருவதற்காக உள்ளே போனான். அப்போது என் மனசில் பெருத்த திகிலும் கவலையும் உண்டாயின. நான் அவனை எப்போதோ பார்த்திருக்கிறேன். ஆகையாலும், அவன் என்னிடம் நெருங்கி வந்து எப்போதும் பார்த்ததில்லை. ஆகையால், அவனுக்கு என்னுடைய அடையாளம் தெரியாது என்ற எண்ணம் உண்டானது. ஆகையால், நான் மனசை அடக்கிக் கொண்டு நன்றாகத் துங்குகிறவன் போலப் பாசாங்கு செய்தேன். அடுத்த நிமிஷத்தில் கந்தன் கையில் விளக்கோடு வெளியில் வந்து