பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49|முகுகுசுந்தரம் "தமிழில் காப்பியங்கள் அதிகமில்லை’ என்று நான் ஒரு முறை பாரதிதாச்னிடம் சொன்னேன். "நான் நிறையக் -காப்பியம் எழுதப் போகிறேன்’ என்று அவர் சொன் ஞர். அவர் சொன்னபடியே காப்பியங்கள் நிறைய எழுதினர். ஆளுல் பாரதியின் முத்தமிழ்ப் பண்பைக் கைவிட்டுவிட்டாள். விருத்தம் பாடத் தகுந்தது என்பது பாரதிதாசன் கொள்கை. விருத்தம் நாடகத் தமிழைச் சேர்ந்தது என்பது என் கொள்கை. பாரதிதாசன் அதை ஒத்துக் கொண்டார். "ஏன், அகவலும் பாடத் தகுந்தது என்று தானே முன் ளுேர் நினைத்தனர். ஆனல் அகவலை இன்னராகம் என்றில்லாமல், எல்லாராகத்திலும் ராகமாலிகையாகப் பாடினர். விருத்தத்திற்கென்று தனி ராகம் இருந்தது' என்று கூறினர் பாரதிதாசன். அக்கூற்று உண்மை. கலிப்பா நாடகத்தமிழ் முறையைச் சேர்ந்தது.கிரேக்க மொழியில் உள்ள.ode-ம் கலிப்பாவும் ஒன்று’ என்பது என் கருத்து. காப்பியப் பண்பைப்பற்றி ஓர் இலத்தீன் தொடர்...... அதன் பொருள் என்ன்வென்ருல்"Begin with the end’ என்பது தான். இலியாதிலும் (Iliac) சுவர்க்க இழப் பிலும் (Paradise Lost) காப்பியம் முடியும் இடத்தில் தொடங்குகிறது. மேலும் படிப்பவன் கீழே வைக்க முடியாதபடி புதினத்தின் சுவையோடு (Novel interest) க்ாப்பியம் தொடர்ந்து செல்ல வேண்டும். இப் பண்பு கள் யாவும் சிலப்பதிகாரத்தில் தான் முழுக்க முழுக்க அமைந்திருக்கின்றன; வேறு தமிழ்க்காப்பியங்களில் இல்லை. இதை நான் பாரதிதாசனிடம் கூறினேன்; அவரும் ஒத்துக் கொண்டார். பாவேந்தரின் காப்பியங்கள் Episode-போல அளவில் சிறியனவாக இருந்தாலும் அளவிறந்த, நுண்ணிய காப்பியப் பண்புகள் மிகுந்தவை; நிலை பேறுபெற்றவை. கவிஞர் பாரதிதாசன் பாரதிக்கு இரண்டுவிதமான பாதிப்புகள் உண்டு. - வட மொழி இதிகாச- இலக்கியப் பாதிப்பு ஒன்று; மேலை