பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149/முருகுசுந்தரம் கோவிலின் முன் மண்டபத்தில் திருக்குறள் மெல்லிசை நிகழ்ச்சியொன்றை ஓர் அடிகளார் ஒரு நாள் நடத் தினர். பாவேந்தர் அந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி யிருந்தார். ஓரிரண்டு திருக்குறள் பாக்களை அப்போது வெளிவந்திருந்த புதிய திரைப்பட மெட்டில் பாடிக் காண்பித்தார் அடிகளார். இசைக்கும் மெட்டுக்கும் முதலிடம் தந்து பாடியதால் குறட்பாக்களின் கருத்துத் தெளிவு சிதைவுற்றது. தலைமை தாங்கியிருந்த கவிஞ ருக்குச் சினம் பொங்கியது. 'இந்தாப்பா! நிறுத்து! நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்கற... உட்கார்!’ என்று கோபத்துடன் சொல்லி விட்டுத் தாம் எழுத்து பேசத் தொடங்கினர். 'எந்த ஒரு பாட்டையும் பொருளிவிளங்கப் பாடவேண் டும்; புரியும்படி பாடவேண்டும். அதேபோலப் பாட்டுக் களும் பொருளோடும், சிறந்த கருத்துக்களோடும் அமைந்திருக்க வேண்டும். திரைப்படத்தில் இப்போது வருபவை பாட்டுக்களா? லொள், லொள், லொள்... இப்படியொரு பாட்டு; என்ன என்ன என்ன... இப்படி யொரு பாட்டு; இதல்ை தமிழ் எப்படி வளரும்? வாழும்? மக்களுக்குத் தமிழ் அறிவு எப்படிப் பெருகும்? சிந்திக்க வேண்டாமா? -என்று ஒரு போடு போட் டார். அடிகளார் உடனே புறப்பட்டு விட்டார். In