பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்,160 ஒரு முறை பெரம்பலூரில் கவியரங்கம் ஒன்றிற்குத் லேமை தாங்கிவிட்டுப் பேருந்தில் சேலம் திரும்பிக் கொண்டிருந்தேன். இளங்காலைப்பொழுது. என்அருகில் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார்.பேச்சுவாக்கில் அவர் ஒரு தமிழ்ப் புலவர் என்று அறிந்து கொண்டேன். பின்னர் அவரோடு பேச்சுக் கொடுத்ததில், மயிலம் தமிழ்க் கல்லூரி முதல்வர் புலவர் துரைச்சாமி ஐயா அவர் என்பதை அறிந்து கொண்டேன். எங்கள் இருவரின் பேச்சு பாரதிதாசன் பக்கம் திரும் பியது. அவர் பாவேந்தர் பற்றிய பின் கண்ட செய்தி களைக் கூறினர்: 'பாரதிதாசனை எனக்கு இளமையிலிருந்தே தெரியும், இளமையில் அவர் சிறந்தமுருகபக்தர். மயிலம்முருகன் கோவிலுக்கு வருவார். மயிலம்கோவில் முருகன் ஆண்டு தோறும் மன்சி மகவிழாவின் போது புதுவைக்கு எழுந்த ருளுவதுவழக்கம். வழயில் வானுர்ர்க்கோவிலில் முருகன் தங்கிச்செல்வது வழக்கம். நானும் உடன் சென்றிருந் தேன். வானூர்க் கோவிலுக்கு வெளியில் பாரதிதாசன் நின்று கொண்டிருந்தார். நான் அழைத்ததும் உள்ளே வந்தார். அக்கோவில் ஐயர் பூசையை முடித்துத் தீபா ராதன செய்யும் போது'வெளியிலே சென்ற் ன்ட்ட்ார். நான் ஏன்?’ என்று அவரைக்கேட்டேன். 'கோவில் உமது தானே?.நீரே பூசை செய்தால் என்ன? (அங்கு பூசை செய்த ஐயரைக் காண்பித்து) அவன் கை யில் திருநீறு வாங்க என் மனம் ஒப்பவில்லை’’ என்று பதிலிறுத்தார். பாரதிதாசன். ஒருமுறை பெகங்ளுரில் திருக்குறள் மாநாடு.நடைபெற் றது. டாக்டர் இலக்குவளுர், புலவர்குழந்தை, டாக்டர் இராச மாணிக்களுர், பாரதிதாசன் ஆகியோர் அதில் கலந்து கொண்டனர். பரிமேலழகர் உரையில் உள்ள குறைகள் பற்றி நான் பேசினேன். பரிமேலழகர் உரை யை முதலில் மறுத்தவர் சிவப்பிரகாசர்தாம்’ என்பதை நான் என் பேச்சில் எடுத்து விளக்கினேன். இலக்கு வருைம், இராசமாணிக்கருைம் என்னுடைய கருத்தைத் தமது உரையில் பாராட்டிப் பேசினர். பாரதிதாசன் தமதுபேச்சில் சைவமடங்களைச் சாடினர்.இலக்குவனரும் இராசமாணிக்களுரும் அதைக்கேட்டு வருந்தியதோடு,