பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துர்ைசாமி ஐயங்கார் 231 அந்தக் குரல் மாசிலாமணிப் பிள்ளையின் மனைவிக்கு அதற்கு முன் பழகிய குரலாகத் தோன்றியது. ஆனாலும், அந்த மனிதன் இன்னான்தான் என்ற நிச்சயம் ஏற்படவில்லை. ஆகையால், தான் என்ன செய்வது என்பதை அறியாமல், அவள் சிறிது நேரம் தயங்க, அவளுக்கு அருகில் நின்று கொண்டிருந்த மாசிலாமணிப்பிள்ளை அந்தக் குரல் யாருடையது என்பதை யூகித்து அறிந்துகொண்டு, “ஒகோ - சரிசரி; வந்திருப்பது போலீசாரல்ல; நமக்கு வேண்டிய மனிதர்தான். நீ இனி இங்கே இருக்க வேண்டாம். போய்ப் படுத்துக்கொள். நான்கதவைத் திறந்து வந்திருக்கும் மனிதரிடம் பேசி அவரை அனுப்பிவிட்டு வருகிறேன்' என்று கூறித் தமது மனைவியைப் படுக்கை அறைக்குள் அனுப்பிவிட்டு அந்த அறையின் கதவை மூடி வெளிப்புறத்தில் தாளிட்டுக் கொண்டு அப்பால் போய்விட்டார். படுக்கையறைக்குள் போன அவரது மனைவி தனது கணவன் சொற்படி உடனே படுத்துக் கொள்ளவில்லை. அந்த அகால வேளையில் வந்த மனிதர் யாராக இருக்கலாம் என்ற சந்தேகமும், ஒருவிதமான பயமும், கலக்கமும் உண்டாகி அவளை சஞ்சலப்படுத்த ஆரம்பித்தன. ஆகையால், அவள் கதவண்டை வந்து நின்று, அதன் இடுக்கால் வெளியில் பார்த்துக் கொண்டு நின்றாள். தனது புருஷன் முன் பக்கத்துக் கதவைத் திறந்தது தெரிந்தது. அவரும் வெளியிலிருந்த மனிதரும் தணிவான குரலில் ஏதோ ரகசியம் பேசிக் கொண்டதையும் அவள் உணர்ந்தாள். ஆனால், அவர்கள் பேசிய விஷயம் இன்னது என்பது அவளுக்கு விளங்கவில்லை. தனது புருஷன் வெளியில் இருந்த மனிதனை உள்ளே விடுத்துக் கதவை மறுபடியும் முன்போல மூடித் தாளிட்டுக்கொண்டு அவனை அழைத்துக் கொண்டு மேன்மாடத்துக்குப் போய்விட்டதும் அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. அதன்பிறகு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை அவள் அறியக்கூடவில்லை.