பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில் 142 சிட்டு வெளியில திரிஞ்சா போலீஸ்கார புடுச்சிக்குட் டுப் போயிடுவான்ல. குடிச்சிட்டா நேரா இங்க வந்து தா படுத்துக்குவா... ஏன்ன... இங்க போலீஸ்கார வரமாட்டான்... பாதுகாப்பான இடம் என்று அம்மை யார் குறிப்பிட்டார்கள். திரையுலகக் கவியரசனுகக் கொடிகட்டிப் பறந்த கம்பதாசனின் நிலையை எண்ணி நான் மிகவும் வருந்தினேன். பாவேந்தரின் இல்லத்தில், 蠶* ர் முறை கவிஞர் கம்பதாசனைப் பார்த் திருக்கிறேன் திடீரென்று வருவார்; உட்கார்ந்து வெற்றிலே பாக்குப் போடுவார். பின்னர் மீனவர் சேரி, அயோத்தியாகுப்பம் ன்ைறு சுற்றப் போய் விடுவார். ஒரு நாள் தமிழ்ச் செல்வி என்ற நாட்டியக்காரச் சிறுமி பாவேந்தரைக் காண வந்தாள். இரண்டொரு நாளில் அவளுடைய நாட்டிய அரங்கேற்றம் நிகழவிருந்தது. பாவேந்தரை வணங்கி அவருடைய வாழ்த்தினைப் பெறு: வதோடு அவருடன் புகைப்ப்டம் எடுத்துக் கொள்ளவும் விரும்பி வந்திருந்தாள். அப்போது பாவேந்தரின் நண்க பர்கள் சிலர் அங்கிருந்தனர். தமிழ்ச் செல்வியின் பெற். ருேரும் உடன் வந்திருந்தனர். பாவேந்தர் கொஞ்ச நேரம் வைத்த கண் வாங்காமல் அந்தப் பெண்ணையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். பாவேந்தர் ஏன் இந்தப் பெண்ணை இப்படிப் பார்க்கிருர்!...... பாவேந்தரின் செயல் எங்களுக்கு என்னவோ போல் இருந்தது. அந்தப் பெண்ணும் நாணி நின்ருள். அப்போது பாவேந்தர் திரைப்படம் எடுக்கும் முயற்சி யில் ஈடுபட்டிருந்த நேரம். பாவேந்தச் அந்தப் பெண் ணைப் பார்த்து, "உனக்கு மடிசார் கட்டத் தெரியுமா?’’ என்று கேட்டார். தெரியாது’ என்று பதிலிறுத்தாள் அந்தப்பெண். "மேக்கப்மேன்! இந்தப் பெண்ணே உள்ளே அழைச்சிக் கிட்டுப் போய் அம்மாகிட்டே கங்குடிப் புடவை இருக் கும். வாங்கி, மடிசார் கட்டிக்கிட்டுவா’ என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் சொன்னர். சிறிது நேரத் தில் மடிசார் கோலத்தில் அந்தப் பெண் பாவேந்தர்