பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 273 அம்மணிபாயி வாக்குறுதி செய்து கொடுத்திருக்கிறாள். இந்த இரண்டு காரணங்களைக் கொண்டு எங்கள் தாயாரும் அந்தச் சதியாலோசனையை எப்படியாவது நிறைவேற்றி விடுவது என்று முனைந்து நிற்கிறாள். நிலைமை இப்படி இருக்க சில தினங்களுக்கு முன் என்னுடைய கடைசித் தங்கை விஷ ஜூரம் கண்டு இறந்து போய்விட்டாள். அதன்பிறகு என்தாயார்வேறே வகையில்லாமையால் இறந்து போனவளுக்குப் பதிலாக என்னை அனுப்ப நினைத்து இந்த ரகசியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக என்னிடம் வெளியிடத் தொடங்கியதன்றி என்னிடம் வழக்கத்துக்கு மாறான அபாரமான வாஞ்சையும் அருமையும் பாராட் டி என்னை ஸ்தோத்திரம் செய்து தங்களுடைய சதியாலோசனைக்கு இணங்கி வரும்படி என்னை நயந்து கேட்டுக் கொண்டாள். அப்போதுதான் நான் இந்த அக்கிரமச் சதியாலோசனையின் விவரங்களை அறிந்தேன். அதை உணர, என் மனம் பட்ட பாட்டை நான் என்ன வென்று வெளியிடுவேன்! அப்படிப்பட்ட படுமோசத்தில் இறங்கத் துணியும் கொடும்பாவியான மனிஷியின் வயிற்றில் வந்து நான் பெண்ணாகப் பிறக்க நேர்ந்ததே என்ற பெருத்த துயரம் என் மனசில் எழுந்து குடிகொண்டது. அந்த வீட்டில் இருக்கவும், அவர்களை என்தாயார், சகோதரிகள் என்று சொல்லி முறைமை பாராட்டவும் என் மனம் கூசியது. நானோ உலக அனுபோகம் இல்லாத இளம்பெண். நான் அவர்களைவிட்டு விலகி வேறாக இருக்க முயன்றாலும், அவர்கள் என்னைச் சும்மா விட மாட்டார்கள். இந்த ரகசியம் எனக்குத் தெரிந்துபோனது ஆகையால், நான் அதை வெளியிட்டு விட்டால், அவர்களுக்குத் தீங்கு சம்பவிக்கும் என்ற எண்ணத்தினால் தூண்டப்பட்டு யாரையாவது ஆளை அமர்த்தி என்னைக் கொல்லச் செய்தாலும் செய்து விடுவார்கள் என்ற பயம் என் மனசில் தோன்றியது. இந்தச்சதியாலோசனையின் விவரங்களை எப்படியாவது இளவரசருக்கும், அவருடைய தாயாருக்கும் தெரிவித்து எச்சரித்துவிடலாமா என்ற யோசனை என் மனதில்