பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 - - பூர்ணசந்திரோதயம்-2 ருந்து திருவையாற்றுக்குப் போகும் ராஜபாட்டையின் வ்ழியாக வந்து கொண்டிருந்த ஒருபெட்டி வண்டி வெண்ணாற்றங்கரை என்ற ஊரை அடைந்து, இந்தக் கதையின் இரண்டாவது அதிகாரத்தில் விவரிக்கப்பட்ட மூன்று உப்பரிகை களுள்ள மெத்தை வீட்டிற்கு எதிரில் நின்றது. அதற்குள்ளிருந்து ஒரு புருஷர் சந்தடி செய்யாமல் பக்கத்துக் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினார். அவருக்குப் பின்னால் ஒரு ஸ்திரீயும் வண்டிக்குள் இருந்து கீழே இறங்கினாள். உடனே அந்தப் புருஷர் வண்டிக்காரனை நோக்கி, வண்டியை மறைவான ஒரிடத்தில் நிற்க வைத்துக் கொண்டு அவ்விடத்தில் ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறி, யார் வந்தாலும் மாளிகைக்குள் விடாமல் தடுத்து அனுப்பி விடும்படிகண்டித்து உத்தரவு செய்துவிட்டுத்தமக்குப்பின்னால் நின்ற யெளவனப் பெண்ணை அழைத்துக்கொண்டு விரைவாக அப்பால் நடந்து போய், முன்பக்கத்தில், தாளிடப்படாமல் வெறுமையாக மூடப்பட்டிருந்த இரும்புக்கம்பிக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்து கதவை மறுபடியும் முன்போல மூடிவிட்டு அந்த ஸ்திரியோடு விரைவாக உள்ளே சென்றார். அப்படி அவசரமாக நடந்த அந்தப் புருஷரும், மடந்தையும், வாயைத் திறந்து பேசாமல் மெளனமாகவே நடந்தனர். அந்தப் புருஷருக்குச் சுமார் நாற்பத்தைந்து அல்லது ஐம்பது வயதிருக்க லாம் என்று தோன்றியது. அவர் தக்க பெரிய மனிதர் போல உயர்வான ஆடைகளை அணிந்திருந்தார். ஆனாலும், அவரது முகம் மிகுந்த விசனத்தையும் கவலையையும் உள்ளடக்கிய கோபத்தையும் காட்டியது. அந்தப் பெண்பாவை சுமார் இருபது வயது அடைந்தவளாய் மகா அற்புதமான அழகும் வசீகரத் தன்மையும் நிரம்பப் பெற்றவளாகக் காணப்பட்டாள். அவள் ஒரு பெரிய துப்பட்டியால் தலைமுதல் கால்வரையில் தன்னை மூடிக்கொண்டு கோஷா ஸ்திரீ போலக் காணப்பட்டாள். அவளது திரேகம் துப்பட்டியால் மூடப்பட்டிருந்ததனால் அது ஏதோ ஒரு திகிலினால், அடிக்கடி