பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 151 சோற்றுக்கடையே இல்லை என்றும் , தன் வீட்டில் கொஞ்சம் சாப்பாடு போடச் சொல்வதாகவும் சொல்லி விட்டுத் தன்னுடைய பெண் ஜாதியைக் கூப்பிட்டு எனக்கு உடனே சாப்பாடு போடும்படி உத்தரவு செய்தான். உடனே நான் உள்ளேபோய் அவனுடைய பெண் ஜாதியினால் அன்பாகப் படைக்கப்பட்ட ஆகாரத்தை உண்டபின் வெளியில் வந்து அப்பாடாவென்று திண்ணையில் படுத்துக்கொண்டு அவர்களுடைய நற் குணத்தைப் பற்றியும், தயான மனசைப் பற்றியும், அவர்கள் செய்த தருமத்தைப் பற்றியும், பலவாறு புகழ்ந்து பேசிப் பேசி, என்னுடைய தட்டில் மிச்சம் இருந்த சுமார் ஒரு வீசை பேரீச்சம் பழத்தை எல்லாம் அப்படியே கந்தனிடம் கொடுத்து அவனுடைய பிள்ளை குட்டிகளுக்கு எல்லாம் கொடுத்துவிடும்படி சொல்ல, அவன் வேண்டாம் வேண்டாம் என்று உபசார வார்த்தை சொல்லிக்கொண்டே அதை வாங்கிக் கொண்டான். என்னுடைய பெரும் புத்தியையும், தயாள குணத்தையும் கண்ட கந்தன் அளவற்ற சந்தோஷம் அடைந்து என்னிடத்தில் பிரமாதமான வாஞ்சை வைக்க ஆரம்பித்தது அன்றி, என்னைவிட்டுப் பிரியாமல் திண்ணைக்கு வந்து என் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு என்னோடு சந்தோஷமாகப் பேச ஆரம்பித்தான். நானும் அவனும் அதன்பிறகு இரண்டு நாழிகை நேரம் வரையில் பற்பல விஷயங்களைப் பற்றி வேடிக்கையாகவும் சந்தோஷமாகவும் பேசிக் கொண்டிருந்தோம். அதற்குள் நான் அவனுடைய மனசையெல்லாம் அடியோடு கவர்ந்துவிட்டேன். அவன் என்னைத் தன்னுடைய அந்தரங்க சிநேகிதன் போலவே மதித்து, சகலமான விஷயங்களையும் மறைக்காமல் பேசும் நிலைமைக்கு வந்துவிட்டான். அதன் பிறகு நாங்கள் இருவரும் சாராயக்கடைக்குப் போய்க் குடித்துவிட்டு வருகிறது என்று தீர்மானித்தோம். உடனே நான் அவனை அழைத்துக்கொண்டு அந்த ஊருக்கு வெளியில் இருந்த சாராயக்கடைக்குப் போனேன். என்னுடைய சட்டைப்பையில் நான் ஏராளமாக