பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கர் 287 அவ்விடத்தில் ஒரு கடிதம் இருக்கக் கண்டு வியப்படைந்து விரைவாக அதை எடுத்துப் படித்தாள். உண்மை இன்னது என்பது விளங்கிவிட்டது. அவள் உடனே அந்தக் கடிதத்தைத் தனது பெண்களிடம் காட்ட நால்வரும் திடுக்கிட்டு, தாங்கள் பிரயாணம் புறப்பட வேண்டிய நெருக்கடியான அந்தச் சந்தர்ப்பத்தில் தாங்கள் எதையும் செய்ய முடியாதிருப்பதைக் கண்டு, தாங்கள் பிரயாணம் புறப்படுவதா அல்லது நிறுத்தி விடுவதா என்பதைப்பற்றி அரைநாழிகை சாவகாசம் சிந்தனை செய்தனர். தாங்கள் பிரயாணத்தை நிறுத்தினால், அதைத் தாங்கள் பெரிய ராணியிடத்தில் வெளியிட நேரும்; அதை வெளியிட்டால், சிவபாக்கியம் ஒடிப்போன விஷயத்தையும் அதன் காரணத்தையும் சொல்ல வேண்டியிருக்கும். அப்படிச் சொன்னால், தங்களுடைய சதியாலோசனையையே வெளியிட நேரும். ஆகையால், அந்தப் பிரயாணத்தை நிறுத்தாமல் தங்கள் ஏற்பாட்டின்படி மிகுதியுள்ள மூவரும் புறப்பட்டுப் போவதே உத்தமம் என்று அவர்கள் தீர்மானித்தனர். இன்னொருத்தி எங்கே என்று லலிதகுமாரிதேவி கேட்டால், அவள் புறப்படும் சமயத்தில் தேக அசெளக்கியமாகப் படுத்து விட்டாளாகையால், அவளை நிறுத்திவிட்டு வந்திருப்பதாகவும், அவளும் சொற்ப காலத்தில் வந்து சேருவாள் என்றும், மூன்று பெண்களும் ஒருவிதச் சமாதானம் சொல்வது என்று முடிவு செய்து கொண்டனர். அவர்கள் மூவருக்கும் தேவையான சாப்பாட்டு சாமான்கள் பாத்திரங்கள் முதலிய பொருட்களை ஏற்றிக் கொண்டு இரண்டு வண்டிகள் தொடர்ந்துவர ஏற்பாடாகி இருந்தது என்பது முன்னரே சொல்லப்பட்ட விஷயமல்லவா. அந்த வண்டிகளல் வண்டிக்காரர்களைத் தவிர இன்னம் இரண்டு வேலைக்காரிகளும் உதவிக்கு வந்தனர். அதுவுமன்றி, அந்த மூன்று பெண்களும் நல்ல அழகான யெளவன ஸ்திரீகள் ஆதலால், அவர்களைப் பெண் துணையின்றித் தனியாக அனுப்புவது உசிதமல்ல என்று நினைத்த அன்னத்தம்மாள், அந்த ஊரிலிருந்த தனது தங்கையான முத்துலகஷ்மி அம்மாள் go.3.II-19 -