பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பூர்ணசந்திரோதயம்-2 அப்போதும் கதவைப் பிடித்த பிடியை விடாமல் நின்றுகொண்டிருந்த ஷண்முகவடிவு உடனே சடக் கென்று மறுமொழி சொல்லத் தொடங்கி, 'சுவாமிகளே! தாங்கள் புறப்பட்டுப் போன பிறகு கொஞ்சநேரத்திற் கெல்லாம் திடீரென்று காற்று வீசி, விளக்கை அணைத்துவிட்டது. இருளில் இருப்பதைப்பற்றி நான் பயப்படவில்லை. ஆனால் தாங்கள் இவ்வளவு நேரமாகத் திரும்பி வரவில்லையே என்ற கவலையே என் மனசில் எழுந்து வதைத்துக்கொண்டிருந்தது. என்னைக் காப்பாற்ற வேண்டுமென்னும் காருண்ய குணத்தோடு வெளியில் போன தங்களுக்கு வழியில் ஏதாவது துன்பம் நேரிட்டிருக்குமோ என்ற கவலையும் உண்டாகி என்னைச் சஞ்சலப் படுத்தினது. ஆகையால், நான் கதவைத் திறந்து கொண்டாகிலும் வெளியில் வந்து தங்களைத் தேடிப்பார்க்க லாம் என்று நினைத்துக்கொண்டு இப்போதுதான் நான் கதவண்டை வந்து தாழ்ப்பாளைத் திறந்தேன். அதே சமயத்தில் தாங்களும் வந்தீர்கள். நல்ல வேளையாகத் தாங்கள் செளக்கியமாகத் திரும்பி வந்தீர்களே. அதுவே போதுமானது; பெரிய பண்ணைப் பிள்ளையவர்கள் வந்திருக்கிறார்களா? அவர்கள் என்னை என்னுடைய ஜாகைக்கு இப்போதே அழைத்துக்கொண்டு போய் விடப்போகிறார்களா? அல்லது, நான் இன்னம் கொஞ்ச நேரம் உள்ளே இருக்க வேண்டுமா?" என்று பணிவாகவும், ரகசியம் ஒன்றையும் அறிந்து கொள்ளாதவள் போலவும் தந்திரமாக மொழிந்தாள். அவளது வார்த்தையைக் கேட்ட கபட சன்னியாசியின் மனதிலிருந்த சொற்ப சந்தேகமும் விலகியது. அவரது ரகசியத்தை அவள் கொஞ்சமும் அறிந்துகொள்ளாமல், இன்னமும் தன்னிடத்தில் முழு நம்பிக்கை வைத்திருக்கிறாள் என்ற நிச்சயம் உண்டாயிற்று. முதலில் கதவை மூடிக்கொண்டு தான் அவளை உள்ளே அழைத்துப் போக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கபடசாமியார் மிகவும் உருக்கமாகப் பேசத்