பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 49 கணிரென்று தெளிவாக வந்து தாக்கின. உடனே அந்த மனிதரது திரேகம் பதறியது. மனம் பொங்கி எழுந்தது. அவரது உள்ளத்தில் மட்டுக்கடங்கா வீராவேசமும், கொதிப்பும் பொங்கி எழுந்தன. அவர் ஒருவரே தனியாக வந்திருந்தார். ஆனாலும், அந்தப் பெண்ணைப் பலவந்தம் செய்யும் மனிதர் எத்தனை பேர்கள் என்பதை அறியாதவராக இருந்தும் அவர் எதையும் கவனியாமல் தமது வஸ்திரங்களை வரிந்து கட்டிக்கொண்டு அந்த வண்டிக்குள் இருந்த ஒரு பெருத்த பாணாத்தடியை எடுத்துக் கையில் பிடித்துக் கொண்டவராய், அந்த வாய்க்காலுக்குள் ஒற்றையடிப்பாதை இறங்கிச்சென்ற இடத்தை நோக்கி ஒட்டமாக ஓடினார். அப்படி ஒடியவர் ஒரு தந்திரம் செய்துவிட்டு ஓடினார். தம்மோடுகூட வண்டிக்காரன் ஒருவனும் வந்திருப்பது போலப் பாசாங்கு செய்து ஓங்கிய குரலில், 'அடேய் சொக்கா! நீ ஒட்டமாகப் பெரிய பண்ணைப் பிள்ளையிடம் ஓடி ஐம்பது ஆள்களோடு அவரை அழைத்துக் கொண்டு கூடின நேரத்தில் ஒடிவா!' என்று உத்தரவு செய்து அனுப்புகிறவர் போலப் பாசாங்கு செய்தார். உடனே அவரே தமது குரலை வேறுவிதமாக மாற்றிப் பணிவாகவும் மரியாதையாகவும் மறுமொழி சொல்லத் தொடங்கி, 'அப்படியே செய்கிறேன் எஜமானே! இதோ ஒரு நொடியில் போய் அழைத்து வருகிறேன்' என்று கூறினார். அவர் இரண்டு விதமாகப் பேசியது இரண்டு வெவ்வேறு மனிதர்களினது குரல்கள் போலவே இருந்தமையால் பக்கத்தில் மறைந்து அதைக் கேட்டிருந்த முரட்டாள்கள் உண்மையிலேயே வண்டியில் இரண்டாள்கள் வந்திருப்பதாகவும், அவர்களுள் ஒருவன் பெரிய பண்ணைப்பிள்ளையை அழைத்து வரப் போயிருப்பதாகவும் எண்ணிக் கொண்டனர். தாங்கள் அப்போது என்ன செய்கிறது என்பது அவர்களுக்குத் தோன்ற வில்லை. கபட சன்னியாசி மடத்தின் வாசலில் நின்றபடி எல்லா விஷயங்களையும் கவனித்துக் கொண்டிருந்தார். ஆதலால், ஷண்முகவடிவு கூச்சலிட்டதையும், அவள்