பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

சுண்டல் விற்கும் அங்காடிக் கடைபோல இருந்தது என்றே கூற வேண்டும் என்று அவர் நினைத்தார். அந்த மகா ஆச்சரியகரமான இராஜாங்க நிர்வாக அமைப்பைக் கண்ட திவானும் மகாராஜனும் வாய்திறந்து பேசவும் இயலாதவர்களாய் ஸ்தம்பித்து சிறிது நேரம் அப்படியே நின்று விட்டனர். உடனே திவான் தமக்கெதிரில் நின்ற ரெவினியூதாசில்தாரை நோக்கி "ஐயா! நீர் யார்?" என்றார்.

தாசில்தார்: நான் ரெவினியு தாசில்தார்.

திவான்: உம்முடைய பெயரென்ன?

தாசில்தார்: என் பெயர் கரண்டிகர் தபரே.

திவான்: உம்முடைய சொந்த ஊர் எது?

தாசில்தார்: இதுதான்.

திவான்: உமக்கு என்ன சம்பளம்?

தாசில்தார்: மாசம் ஒன்றுக்கு ரூ.100.

திவான்: நீர் எவ்வளவு காலமாக இந்த வேலையைப் பார்த்து வருகிறீர்?

தாசில்தார்: சுமார் பத்து வருஷ காலமாக நான் இந்த வேலை பார்த்து வருகிறேன்.

திவான்: உம்மை இந்த வேலைக்கு நியமித்தது யார்?

தாசில்தார்: இந்த சமஸ்தானத்து திவான் சாயப் நியமித்தார்கள்.

திவான்: நீர் இந்த ஊர் திவானை நேரில் பார்த்திருக்கிறீரா?

தாசில்தார்: நான் இதுவரையில் பார்த்ததில்லை. தாங்கள் தான் திவான் சாயப் என்று இப்போது சிலர் சொன்னதிலிருந்து தெரிந்துகொண்டேன்.

திவான்: இந்த வேலை உமக்குக் கிடைத்தபோது, உமக்கு யார் தாக்கீது கொடுத்தார்கள்?

தாசில்தார்: நான் படித்து பரீட்சையில் முதல் வகுப்பில் தேறி, திவான் சாயப் கச்சேரியில் உத்தியோகத்திற்காக முயற்சி செய்தேன். அங்கேயிருந்த யாரோ ஒரு சேவகர் புதிதாக ரெவினியூ தாசில்தார் உத்தியோகம் ஒன்றை உண்டாக்கப்போகிறார்கள்

63