பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 199 ஜெமீந்தார்:- சரி. அப்படியானால், நீ போய்விட்டு வாஎன்றார். . உடனே ஹேமாபாயி அவரிடம் செலவு பெற்றுக்கொண்டு அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டாள். புறப்பட்டவள் நேராகத் தனது ஜாகைக்குப் போய்த் தனக்குத் தேவையான வஸ்துக்களை எடுத்துக் கொண்டாள். தனது வேலைக்காரியை அனுப்பி மாரியம்மன் கோயிலுக்குப் போய் வர, ஒரு குதிரை வண்டி அமர்த்திக்கொண்டு வரச்செய்து, அதில் உட்கார்ந்து கொண்டு உடனே பிரயாணமானாள். குதிரை வண்டி விசையாக ஓடி, மாலை ஆறு மணிக்கு அவளைச் செட்டித் தெருவில் கொண்டு போய்விட்டது. அந்தத் தெருவில் பங்களா இருந்த இடத்தை அறிந்துகொண்டு அவள் நேராக அதற்குள் நுழைந்தாள். வாசலில் இருந்த தோட்டக்காரன் அவளைப் பார்த்து, யாரோ பெரிய மனிதர் வீட்டு ஸ்திரீ என்றும்,தனது எஜமானருக்கு வேண்டியவள் என்றும் நினைத்து, எழுந்து வணக்க ஒடுக்கமாக நின்று, 'என்ன, அம்மணி வேண்டும் என்று கேட்டான். - அவள், 'ஏனப்பா மாசிலாமணிப் பிள்ளையினுடைய பங்களா இதுதானே?' என்றாள். தோட்டக்காரன், "ஆம், அம்மணி இதுதான் என்றான். ஹேமாபாயி, "அவர் உள்ளே இருக்கிறாரா? அல்லது, எங்கே யாவது வெளியில் போயிருக்கிறாரா?” தோட்டக்காரன், 'உள்ளேதான் இருக்கிறார்கள்; அம்மணி உங்களுக்கு என்ன ஆகவேண்டும்?' என்றான். ஹேமாபாயி, "ஒன்றுமில்லை. நீ அவரிடம் போய் தஞ்சாவூரிலிருந்து ஓர் அம்மாள் வந்திருப்பதாகவும், அவரைப் பார்க்கப் பிரியப் படுவதாகவும் சொல் 1’ என்று நயமாகக் கூறினாள்.