பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தர்ம் -இ தொழுகைக் கூடப் பெண்கள் பகுதியில் சலசலப்பு. ஆடவர் பகுதியில் கிசுகிசுப்பு. கூர்ந்து நோக்கினார் பாதிரியார். பெண்கள் தாங்கள் உடுத்தியிருந்த புடவைகள் பற்றியும் அணிந்திருந்த அணிமணிகள் பற்றியும் விமர்சனம் செய்து கொண்டிருந்தனர். ஆடவர்கள் அரசியலையும் அன்றைய புதுத் திரைப்படத்தையும் அலசிக் கொண்டிருந்தனர். பாதிரியார் மனவருத்தத்தோடு தொழுகையை முடித்தார். அடுத்த நாள் காலையில் கோயிலின் அறிவிப்புப் பலகையில் கீழ்க்கண்டவாறு எழுதிவைத்தார்: தலைகாது மூக்கு கழுத்துகை மார்புவிரல் தாள் என்ற எட்டுறுப்பும் தங்கநகை வெள்ளிநகை ரத்தினமிழைத்த நகை தையலர்கள் அணியாமலும் விலைகுறையும் ஆடைகள் அணிந்துமே கோயில்வர வேண்டும்... ... அடுத்த ஞாயிற்றுக் கிழமை காலை தொழுகையைத் தொடங்கக் கோயிலின் கூடத்தில் நுழைந்தபோது, பாதிரி திடுக்கிட்டார். கோயில் வெறிச்சோடிப் போயிருந்தது. பக்தர்கள் யாரையும் கானோம். மனமுடைந்த பாதிரியார் அறிவிப்புப் பலகையை அணுகினார். முன்பு தாம் எழுதியிருந்த வாசகத்தை அழித்துவிட்டுப் புதிய திருவாசகம் ஒன்றை எழுதிவைத்தார். எட்டுறுப் பேயன்றி நீளிமைகள் உதடுநாக்கு நிறைய நகை போடலாம் கோயிலில் முகம்பார்க்க நிலைக்கண்ணாடியும் உண்டு - என்பதே அவ்வாசகம். அடுத்த வாரம் கோயிலின் தொழுகைக் கூடம் நிரம்பி வழிந்தது. கடைசியில் கவிஞர் தம்முடைய கருத்தாக,