பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ மிகச் சிறப்பானது. பணக்காரனின் பேச்சுச் சாதுரியம், கவிஞரின் அறிவு நுட்பத்துக்கு அளவு கோல். மேலே குறிப்பிட்ட இரண்டு பாடல்களும் எள்ளல், நகைச்சுவை, சமத்காரம் என்ற எல்லாப் பண்புகளும் நிறைந்து சிறப்பான அங்கத உத்தியுடன் விளங்குவதைக் காணலாம். 4 ஆங்கிலக் கவிஞன் அலெக்சாண்டர் போப் எழுதியுள்ள 'கூந்தலின் கற்பழிப்பு (Rapeofthe Lock) என்ற அங்கதக் காப்பியம் கற்பனையழகும், அணியழகும், புலமை துணுக்கமும் நிறைந்தது. அவர் வாழ்ந்த காலத்தில் இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த செல்வச் சீமாட்டிகள் இல்லறத்தில் நாட்டம் கொள்ளாமல், இன்ப வேட்கையிலேயே காலம் கழித்தனர்; செருக்கோடு திரிந்தனர்; ஆடம்பரத்தில் திளைத்தனர். கற்பை இழப்பதைத் தம் பட்டுத்துணியில் கறைபடிவதைப் போலவும், ஒரு சீனக்குவளை கைதவறிக் கீழே விழுந்து உடைவது போலவும் எளிதாக எடுத்துக் கொண்டனர். அதிகாரத்திலும், செல்வாக்கிலும் சிறப்புற்றிருந்த காளையரைத் தம் காதலுக்குப் பணிய வைப்பதை வெற்றியாகக் கருதினர். ஐம்பது வயதானாலும் கன்னியாகக் காலம் கழிப்பதைப் பெருமையாக நினைத்தனர். இந்த மானமற்ற போக்கை, போப் தன் சொல்லம்புகளால் துளைத்து எடுத்துவிட்டார். ஒர் இளைய சீமாட்டியின் கூந்தல் கற்றையை அவளுக்குத் தெரியாமல் வெட்டியெடுத்த ஓர் இளைஞனின் விளையாட்டுத்தனமும், அதனால் ஏற்பட்ட பின் விளைவுகளும் காப்பியப் பண்புகளோடு இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. இதுவோர் எள்ளல் காப்பியம் (Mockepic). பெருங்காப்பியப் பண்புகளான தேவதைகளின் LjfğıĜojbLq, Gi_jrTń, _9iĝ#; #fòl Japçõî (Supernatural elements)