பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பூர்ணசந்திரோதயம்-2 அந்தத் தோப்பில் நடந்து சிறிது தூரம் செல்ல, சுமார் ஐம்பது கஜ தூரத்திற்கு அப்பால், ஒரு வாந்தரின் - மங்கலான வெளிச்சம் தெரிந்தது. அவ்விடத்தில் ஒருவிதமான ஒசையுண்டானதையும் அந்தப்பெண் கேட்டாள். உடனே அவள் திடுக்கிட்டுக் கலங்கி, ‘என்ன வெளிச்சம் அது? இந்த நடு இரவில் யார் அங்கே வெளிச்சம் வைத்துக்கொண்டிருக்கி றார்கள்? அவர்கள் என்ன செய்கிறார்கள்? ஏதோ ஒசை கேட்கிறதே அது என்ன ஒசை' என்று மிகுந்த கவலையோடு கேட்க, அந்தப் புருஷர் கடுகடுத்த முகமாக வைத்துக்கொண்டு அவளைநோக்கி, ‘அங்கே ஒரே ஒரு மனிதன்தான் இருக்கிறான், அவன் பூமியில் குழி தோண்டிக் கொண்டிருக்கிறான்' என்று சுருக்கமாக மறுமொழி கூறினார். அந்தப்பெண் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த கிலியும் குழப்பமும் அடைந்து, ‘என்ன ஆச்சரியம் இது இந்த நடு ராத்தியில் அந்த மனிதன் எதற்காகக் குழி தோண்டுகிறான்? நாம் ஏன் இப்போது அங்கே போக வேண்டும்?' என்று அச்சத்தோடு கேட்க, அந்தப் புருஷர், 'நடுராத்திரியில் மனிதர் திருட்டுத்தனமாக எதற்காகக் குழி தோண்டுவார்கள்? யாரையாவது அதற்குள் போட்டுப் புதைக்கத்தான் தோண்டுவார்கள். வேறே எதற்காகக் குழி தோண்டுவார்கள்' என்று அருவருப்பாகக் கூறினார். அதைக்கேட்ட மடந்தை கதிகலங்கிப்போய், "என்ன இது? இன்று ராத்திரி தஞ்சையிலிருந்து திரும்பிவந்த முதல் நீங்கள் புது மனிதராக மாறிப்போயிருக்கிறீர்களே! எப்போதும் என்னிடத்தில் காட்டும் பிரியமும் மதிப்பும் எங்கேயோ போய்விட்டனவே! யாரோ விரோதியிடத்தில் பேசுவதுபோல என்னிடத்தில் வெறுப்போடும் கோபத்தோடும் பேசுகிறீர்களே! குழிதோண்டி மனிதரைப் புதைக்கப் போவதாகச் சொல்லுகிறீர்கள். இன்ன சங்கதி என்று நன்றாக விவரித்துச் சொல்லக் கூடாதா? நான் உங்களிடத்தில் அப்படி என்ன தவறு. செய்துவிட்டேன்? உங்களுக்காக நான் என்னுடைய உறவினர்