பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் 171 மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனும், வனக்காவலர் ஒருவரும் இவருக்கு வாய்த்த முதல் சீடர்கள். - சிவகிரியில் ஒர் ஆசிரமத்தை நிறுவிக் கோயிலொன்று எழுப்பி, அதில் சிவலிங்கத்தை நிறுவும் திருப்பணியை மேற்கொண்டபோது, கேரளத்து நம்பூதிரிகள் அதை எதிர்த்தனர். “இது ஈழவரின் சிவலிங்கம்! உங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை; உங்கள் கோயில்களில் நுழைய விடாமல் இவர்களை ஒதுக்கினர்கள். ஆண்டவனை நாங்கள் எங்கள் கோயிலுக்கு அழைத்து வந்திருக்கிறோம். நீங்கள்.இதில் குறுக்கிடவேண்டாம்” என்று உரத்த குரலில் சொன்னார். கேரளத்தில் இவர் ஆலயப் பிரவேச முயற்சியைத் தொடங்கியபோது, இவரைச் சமாதானப் படுத்துவதற்காக காந்தியடிகள் கேரளம் வந்தார். “இங்கு விலங்குகளையும்விடக் கேவலமாக வாழும் தாழ்த்தப்பட்ட மக்களைத் தன்மானம்மிக்க மனிதர்களாக மாற்றும் முயற்சியில் நான் ஈடுபட்டிருக்கிறேன்” என்று காந்தியடிகளுக்குக் குரு விளக்கினார். மேலும், இந்து சமயத்தில் விலங்குகளாக வாழ்வதை விடத் தம்மை மனிதர்களாக உயர்த்திக் கொள்வதற்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் கிறித்தவ சமயத்தில் சேருவதும் தப்பில்லை என்றார். இவரைச் சந்தித்த பிறகே வார்தா திரும்பிய காந்தியடிகள் அரிஜன் இதழைத் தொடங்கினார். கேளரத்தைச் சேர்ந்த டாக்டர் "பல்ப் (பத்மநாபன்) என்ற பேராசிரியர் விவேகானந்தரைச் சந்தித்துத் தம்மைச் சீடராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டியபோது, “நீங்கள் என்னைத் தேடி ஏன் வந்தீர்கள்? கேரளத்தில் உள்ள அருவிப்புரம் செல்லுங்கள்; உங்களுக்கு ஏற்ற குரு அங்கிருக்கிறார்!’