பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- பாவேந்தர் படைப்பில் அங்கதம் -(3) பிறகு என்னுடன் உணவருந்தினார். உண்டபின் தாழ்வாரத்தில் பாயை விரித்துப் படுத்தேன். நல்ல தூக்கம். "கழுதை என்ன இப்படி ஒரேயடியாத் துரங்கறே? என்ற சத்தம் கேட்டு விழித்துப் பார்த்தேன். எதிரில் காப்பிக் குவளையோடு பாவேந்தர் நின்று கொண்டிருந்தார். சிவாஜி மலருக்குக் கவிதை வேண்டுமென்று அவரிடம் கேட்டுவிட்டு, நான் அரவிந்தர் ஆசிரமம் சென்று திரும்பினேன். பாட்டு வேணும்னு கேட்டியே இந்தா என்று தாளை நீட்டினார் பாரதிதாசன். எழுத்தெல்லாம் புதியநடை எண்ணமெலாம் தன்னுடைமை எனவே நாட்டின் பழுத்தபொதுத் தொண்டு செய்வான் திருலோக சீதாராம் பரப்பும் ஏடு வழுத்துமோர் சிவாஜியெனல் வண்டமிழ்நா டறியுமந்த மைந்த னுக்குத் தழைத்ததுவாம் பதினேழாண் டென்றுரைத்தால் மகிழாத தமிழ ருண்டோ? இவனுயர்ந்தான் அவன் தாழ்ந்தான் என்னும்இன வேற்றுமையோர் அணுவும் இல்லான் எவன்பொதுவுக் கிடர் சூழ்ந்தான் அவன் தாழ்ந்தான் அஃதில்லான் உயர்ந்தான் என்று நுவல்வதிலே திருலோகன் அஞ்சாநெஞ் சன்தக்க நூற்கள் ஆய்ந்தோன்