பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[तद्ध]-- முருகு கந்தரம் 一图 ஒரு நாள் மழையில் நனைந்து வீடு திரும்பிய பிரெளனிங், கடுமையான சளித்தொல்லையால் படுத்த படுக்கையானான். அதைத் தொடர்ந்து வந்த மாரடைப்பு அவனை வீழ்த்திவிட்டது. 1889ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் பன்னிரண்டாம் நாள், அவன் கடைசி நூலான அசலேண்டோ (Asolando) வின் வெளியீட்டு விழா இலண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லா இலக்கிய ஏடுகளும் சிறப்பாக அந்நூலைப் பாராட்டி எழுதியிருந்தன. இக்கம்பிச் செய்தி, வெனிசுநகரில் தன்மகன் இல்லத்தில் படுத்த படுக்கையாகக் கிடந்த பிரெளனிங்கிற்கு அறிவிக்கப்பட்டது. "அப்படியா! மிக்க மகிழ்ச்சி!” என்று சிரித்துக் கொண்டே உயிர்விட்டான் பிரெளனிங்.