பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்|40 டிருந்த போது 'பாரதியும் கவிஞனில்லை; பாரதிதாசனும் கவிஞனில்லை. இருவருமே வடசொற்களைக் கலந்து பாட்டெழுதுகிருர்கள்." என்று ஒரு கருத்தை வெளி யிட்டார். 'வட சொற்களை மிகுதியாகக் கலந்து பாட்டெழுது வதை நான் வரவேற்கவில்லை. என்ருலும் மிக அரிதாக ஏற்ற இடங்களில் ஓரிரு வடசொற்களைக் கலக்கும் போது கவிதையழகு மிகுதியாகிறது. வள்ளுவர். கம்பர் போன்ற பெருங் கவிஞர்களும் இதற்கு விலக்கானவர் அல்லர். அவ்வாறு பயன் படுத்தும் அவ்வரிய சொற்களைத் தமிழாகவே எடுத்துக் கொள்ளலாம் என்பது என் கருத்து, என்று நான் மறைமலையடிகளிடம் சொன்னேன். 'வட சொற்களை நேரடியாகத் தமிழ்க்கவிதையில் பயன் படுத்த வேண்டியதில்லை. அவற்றுக்கு ஒப்பான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தலாம் : அல்லது புதிதாகப் படைத்துக் கொள்ளலாம்' என்று மறைமலையடிகள் மீண்டும் சொன்னுர், 'சமஸ்கிருதம் நமக்கு எதிரான மொழியன்று. நீங் களே காளிதாசனின் கவிதையழகில் நெஞ்சைப் பறி கொடுத்துச் சாகுந்தலத்தைத் தமிழில் மொழிபெயர்த் திருக்கிறீர்கள். சாதிவருண வேறுபாடு உடையவர்கள் அதைப் பயன்படுத்துவதாலேயே நாம் அதை ஆரியம் என்று எதிர்க்கிருேம். இலக்கியவளமும், கருத்துச் செறி வும் உள்ள சமஸ்கிருதச் சொற்களை மிக இன்றியமை யாத இடங்களில், இலக்கண வரம்புக்கு உட்படுத்திப் பயன்படுத்துவதில் கவிதையழகு மிகுதியாகிறது’’ என் பதை நான் மீண்டும் சொன்னேன். அக்கருத்தை ஒரளவு சரியென்று மறைமலையடிகள் ஏற்றுக்கொண்டார். மறைமலையடிகளைச் சந்தித்தது பற்றியும், அவரிடம் மொழித்துய்மை பற்றிஉரையாடியதுபற்றியும், அடுத்த முறை பாரதிதாசனைச் சந்தித்தபோது கூறினேன். அதைப்பொறுமையோடுகேட்டுக் கொண்டிருந்த பாரதி தாசன் 'அது சரி! கம்பனுக்கும் எனக்கும் என்ன முடிச்சு?’ என்று கேட்டார். 'கம்பன் வட சொல்லைத் தம் பாடல்களில் அளவோடும்