பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89/முருகுசுந்தரம் புலவர் குழுவிலும், வேறு சில கூட்டங்களிலும் இரு வரும் சந்திப்பதுண்டு. எங்கள் நட்பைப் பிரிப்பதற்காக எதிரிகள் வேலை செய்வதாகப் பாரதிதாசன் அப்போது அடிக்கடி என்னிடம் சொல்லுவார்; வருந்துவார். எங்கள் வெளிநட்புத் தொடர்ந்தது; ஆல்ை வீட்டு நட்பு அறுந்தது. உணவுக் கொள்கை: புலால் உணவு தான் பழந்தமிழர் உணவு என்ற கொள் கையில் பாரதிதாசன் உறுதியானவர்; புலால் உணவு உண்டால் தான் வீர உணர்வு மேலோங்கி நிற்கும் என்பதிலும் அளவு கடந்த நம்பிக்கையுடையவர். ஆல்ை சைவ உணவு தான் தமிழர் உணவு என்பதில் நான் அதிக நம்பிக்கையுள்ளவன். இந்தக் கொள்கை வேறுபாடு எங்களை எந்த விதத்திலும் பாதித்ததில்லை. நாங்கள் இருவரும் எப்போதும் அருகருகே அமர்ந்து உண்ணும் வழக்கமுடையவர்கள். அவருடைய இலையில் எல்லாவிதமான புலவும் மீனும் வகைவகையாகப்பரிமா றப்படும். எளிய மரக்கறி உணவு என் இலையில் பரிமா றப்படும். அவரவர் அவரவருடைய உணவை விரும்பிச் சுவைத்துச்சாப்பிடுவோம். நான் மரக்கறி உணவு சாப்பி டுவதை அவர்கேலி செய்ததுமில்லை; கண்டித்ததுமில்லை. பாரதிதாசனுக்கு மிகவும் நெருக்கமான இசுலாமிய நண்பர் ஒருவர் அடிக்கடி அவரைத் தேடி வருவார். அவர் ஒரு நாள் பண்வேத்தரைப் பார்த்து, நீர் புலால் உணவுதான் தமிழர் உணவு என்ற கொள்கை யுடையவர். உமது நண்பர் அப்பாதுரை அக் கொள்கைக்கு எதிரானவர். தமிழர் உணவான புலாலை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால், கொள்கையளவில் அவர் ஆரியர் தானே?’ என்று கேட்டார்.

  • அதெப்படி? அவர் கொள்கைப்படி அவர் நடக்கிருச். நம்முடைய கொள்கைப்படி நாம் நடக்கிருேம். கொள்கை ஒன்றும் நடப்பு வேருகவும் இருப்பதுதான் தவறு' என்று விடையிறுத்தார் பாரதிதாசன்.

தமிழியக்கம் மறைமலையடிகளிடம் ஒரு முறை நான் பேசிக் கொண்