பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 289 நிலைமையிலேயே இருந்து வந்தாள். அவளுக்கும் அன்னத்தம் மாளுக்கும் பாகம் பிரித்து பல வருஷ காலம் கழியுமுன்அக்காள் லrாதிபதியாகி விட்டாள். தங்கையோ பிrாதிபதியாகவே இருந்து வந்தாள். அக்காளைவிடத் தங்கை பொருள் தேடுவதில் அதிக தந்திரமும் ஊக்கமும் முயற்சியும் உடையவளாக இருந்து வந்தாலும், மூத்தவளுக்கு அதிகப் பிரயாசையின்றி செல்வம் அபிவிருத்தி ஆகிக்கொண்டே போனது; இளையவள் நாயாகக் குலைத்து நரியாக ஊளை யிட்டு இராப் பகல் உடம்பை வதைத்துப் பொருள் தேடினாலும் ஏழ்மைத்தனமே பெருகிக் கொண்டிருந்தது. ஆனால், அக்காளும் தங்கையும் பிரிந்து வெவ்வேறாக இருந்து வந்தாலும், தங்கையினது கஷ்ட ஜீவனத்தைக் கண்டு அக்காள் அடிக்கடி அனுதாபமொழி கூறிப் பிழைப்புக்கு வழிகாட்டி வந்தாள். அக்காள் செய்யும் எப்படிப்பட்ட சதி ஆலோசனையிலும், தங்கை துணைக்கருவியாக இருந்து உதவி செய்து வந்தாள். எவ்வளவு அக்கிரமமான மோசடியாக இருந்தாலும், அக்காள் சொல்லிவிட்டால் தங்கை அதை நிறைவேற்றி வைப்பாள். அன்னத்தம்மாள் தனது தங்கையைத் தனது பெண்களுக்குத்துணையாகப் பூனா தேசத்துக்கு அனுப்பி வைத்தாள். ஆனாலும், லலிதகுமாரி தேவியின் விஷயத்தில் தங்களது பெண்கள் செய்ய உத்தேசித்திருக்கும் சதி ஆலோசனையை மாத்திரம் அவர்கள் முத்துலக்ஷ்மியம் மாளிடம் வெளியிடவில்லை. இளவரசர் அடிக்கடி தனது அக்காளினது வீட்டுக்கு வருவதும், தனது அக்காள் பெரிய ராணியினிடத்தில் போக்குவரத்தாக இருப்பதும் தங்கைக்குத் தெரியும். ஆதலால், அந்தப் பரிச்சயத்தின் மூலமாக இளவரசர் அவர்களின்மீது அபிமானம் வைத்து அவர்களைத் தாசி உத்தியோகங்களில் அமர்த்திப் பூனாவுக்கு அனுப்பி இருக்கிறார் என்று தங்கை எண்ணி இருந்தாளேயன்றி, ரகசியத்தில் ஒரு பெருத்த சதியாலோசனை நடந்துவருகிறது என்பதைப்பற்றி அவள் கொஞ்சமும் சந்தேகிக்கவில்லை.