பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67|முருகுசுந்தரம் கூட்டியும் குறைத்தும், வேறு வடிவம் பெற்றும்வரும். அவ்வாறு வந்த செய்திகளில் ஒன்று, திருவாளர் செல்லன் நாயக்கர் அவர்கள் எங்கள் இயக்கத்துக்கு விரோதமாகப் பல காரியங்களைச் செய்தார் என்பது. நான் பொதுக்கூட்டங்களில் வழக்கறிஞர்களைத் தாக்கிப் பேசிய காரணத்தால், என் மீது சுமத்தப்பட்ட எந்த வழக்குக்கும், எந்த வழக்கறிஞரும் ஆஜர் ஆகக்கூடாது என்று வழக்கறிஞர்கள் மன்றத்தில் பூரீமான் நாயக்கர் கூறினர் என்பதே அச்செய்தி. அதைப் பற்றியும், அம் மன்றத்தின் முடிவினை மீறி பூரீமான் சவரிநாதன் என்ற வழக்கறிஞர் எனக்காகப் பேச முன் வந்தது பற்றியும், இன்னும் வேறுபல செய்திகள் பற்றியும் நானும் பாவேந்தரும் நெடுநேரம் வரையில் பேசிக் கொண்டி ருந்தோம். 'நீங்கள் கூடச் செல்லன் நாய்க்கரை ஆதரித்ததாகச் சிறைக்குள் செய்தி அடிப்பட்டது’’ என்று நான் பாவேந்தரைப் பார்த்துக் கூறினேன். அவர் மீது இப் படி யாராவது சொன்னல், அதை எப்போதும் பெரிதாக எடுத்துக் கொள்ள ம்ாட்டார். அத்தகைய கட்டுக் கதை களின் கர்த்தா யாரென்று யூகித்துக் கொண்டு இது அவன் வேலை’ என்று மட்டும் சொல்வார். இது என் னைப்பற்றிய விவகாரமாதலால் வழக்கத்துக்கு மாருகப் பதட்டம் கொண்டார். "எவன் ாொன்னன்? செருப்பால் அடி! ஏம்பா! இதோ ஒன்றரை வருடம் சிறையில் கழித்து வந்து நிக் கற உனக்குப் பாதகமாய் பேசறவனேட நான் ஒத்து இருப்பேன? அந்தச் செல்லான் நாய்க்கர் ஒண்னும் பூதமல்ல. ஒரு வேளை அவர் ஆட்சிக்கே வந்துட்டா, அந்த ஆட்சியை 24 மணி நேரத்தில் கீழே இறக்கி விட எங்கிட்ட சரக்கிருக்குது’’ என்று ஆவேசப்பட்டுப் பேசினர் பாவேந்தர் . பிறகு சில தினங்கள் கழித்துக் கூப்பிட்டனுப்பினர். சினி மாவுக்குப் பாட்டெழுத ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது" டி.கே. சண்முகம் கம்பெனிய்ார் படம் எடுக்கிருர்கள். நீ வரியா? வாயேன். இவ்வளவு நாள் சிறையில் கிடந்தையே! வா போயிட்டு வருவோம்' என்ருர், சரி என்றேன். அடுத்த இரண்டு தினத்தில் புறப்பட்டோம்.