பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்|66 அந்தக்கடையில் அவர் ஒருநாள் அரசியல் விசாரணை யில் ஈடுபட்டிருந்தபோது நான் ஒரு பொதுக்கூட்டத் திற்குப் போவதற்காக அவ்வழியே நடந்து சென்றேன். என்னுடன் ஒரு சிறு கும்பல் வந்து கொண்டிருந்தது; கவிஞரைக் கண்டதும் கூட்டத்தை ஒதுக்கி விட்டு நான் அருகில் சென்று எனது வணக்கத்தைச் சொன்னேன். "கூட்டத்திற்குப் போகிறேன்' என்றேன். 'ஊம் போபோ! நல்லாப் பேசlன்னு சொன்ஞங்க. நல்லாப் பேசுப்பா! நீ சொல்றதைத்தா ஜனங்க கேட் பாங்க. அந்த வெண்டைக்கா முதலி எல்லாம் இலக் கணத்தோட வெகு நல்லாத்தான் பேசுவாங்க. ஆளுல், ஜனங்க கேட்க மாட்டாங்க. ஏன் தெரி யுமா? நீ உன்மையைப் பேசற.ஒன்னு சொல் றேன்.உனக்கு மேடையில எறிஞ உண்மையே பேசு, ஏன் தெரியுமா? உன்னிடம் படிப்பில்லை- பணமு மில்லை. அவனெல்லாம் படிப்பால தப்பிச்சுக்குவான். மற்றவன் பணத்தால் தப்பிச்சுக்குவான். நீஉண்மை யாலதான் நிலைக்கணும்’ என்ருர் பாவேந்தர். இன்னும் அந்தச் சொற்கள் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இது நட்ட நடுத்தெருவில், ஒரு கும்பலை வைத்துக் கொண்டு அவர் எனக்கு இட்ட கட்டளை என்றே சொல்லுவேன். அவரது கொள்கை மேடையேறிப் பேசும் போது உள்ளத்தை அப்படியே கொட்டுவது. D 1940 ஆம் ஆண்டு, 18 மாதங்கள் சிறையில் கழித்து விட்டு, நான் விடுதலைபெற்று வெளியேறிய நேரம், விடு தலை பெற்று வெளியில் வந்ததும், அன்று மாலை பாவேந்தரைப் பார்ப்பதற்காகச் சென்றேன். மிஷன் வீதியில் மயிலம் மடத்துக்கு எதிரில் முனைப் பங்களா வீட்டில்பாவேந்தர் குடியிருந்தார்; என்னைக் கண்டதும் துள்ளி வந்து கைகளைப் பிடித்து வரவேற்ருர். 'சிறையில் உனக்கு அதிகத் தொந்தரவு கொடுத்தார் கனாமே!’ என்றெல்லாம் விசாரித்துத் தமது உள்ளக் ழைவினை உணர வைத்தார். சிறையில் இருக்கும் பாது, வெளியிலிருந்து வரும் செய்திகள் பலவாருகக்