பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில் 32 வாதியாக வேறுயாரும் இருந்திருக்க முடியாது. அந்தக் காலத்துச் சமுதாயச் சூழ்நிலை அதற்கு மேல் இடங் கொடுக்கவில்லை. நானும் அப்போது அப்படித்தான் இருந்தேன். பாரதியைப்போல் நானும் அன்று பேராயக் கட்சி(Congress)க் காரன்; கதரைத் தோளில் சுமந்து விற்றவன். நானும் ஆத்திகன்; சுப்பிரமணியர் துதியமுது பாடியவன். அப்போது அவரிடத்திலும் தனித் தமிழ் இல்லை; என்னிடத்திலும் தனித் தமிழ் இல்லை. ப்ாரதி படிப்படியாகச் சீர்திருத்தவாதியாக மாறிவந்ததை நான் என் கண்ணுரக் கண்டேன். பாரதி உயிரோடிருந்திருந்தால் 'சுய மரியாதைக்காரராக’ மாறியிருப்பார். என்னைப் போல் தான் பாடியிருப்பார்' என்று கூறினர் பாரதிதாசன். தொடர்ந்து பாரதியைப் பற்றிக் கூறும் போது, 'பாரதிக்கு அழுத்தமான சீர்திருத்த உணர்வுண்டு . சில நேரங்களில் பார்ப்பனியத்தை வெளிப்படையாகவே எதிர்த்துக் கருத்துக்களைத் தெரிவிக்கத் தயங்க மாட் டார். பாரதியார் பாண்டிச்சேரியில் இருந்த போது நீதிக் கட்சிச்(Justice Party) செய்தித்தாள்கள் அங்கும் வரும். பாரதி அத்தாள்களை விரும்பிப் படிப்பார். ஒரு நாள் பாரதியும், வ.வெ.சு. அய்யரும், நானும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நண்பர் நீதிக் கட்சித்தாள் ஒன்றை அங்குக் கொண்டு வந்தார். வ.வெ.சு. அய்யரைப் பார்த்ததும், அதை மூடி மறைத் தார். அதைக் கண்ட வ.வெ.சு. அய்யர் என்ன ஒய்! ஜஸ்டிஸ் கட்சி பத்திரிக்கை கெண்டுவந்திருக்கிறீ ராக்கும்! அதையேன் மறைக்கிறீர்? நீங்களெல்லாம் எங்களை எதிர்த்து, இப்ப பிராமணரா வளர்றிங்க ளாக்கும்! நீங்களெல்லாம் பிராமணனு வளர்ந்துட்டா பிராமணன் அப்படியே இருப்பான்னு உங்க நினைப்போ? ஏய்யா! புல் ப்ன்ை யானு பனை மலை யாகாதா?’ என்று கூறிச் சிரித்தார். அதற்குப் பாரதியார், "ஒய் அய்யரே! அறிவுத் துறையில் வேண்டுமானல் நீங்கள் அவர்களை வெல்லலாம். வீரத் துறையில் நீர் அவர்களை என்ன செய்து விட முடியும்? பிராமணரல்லாதார் உதைக்க ஆரம்பித்தால் நீங்கள் எங்கே ஓடி ஒளிவீர்?’ என்று கேட்டார். அய்யர் பேசாமல் இருந்து விட்டார். பார்ப்பனரை எதிர்க்கும் உணர்வு அந்த நாளில் பாரதியாருக்கு உண்டு. பிரா