பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121|முருகுசுந்தரம் மதச் சார்பற்ற கல்வியாக மாற்றிய பிரஞ்சுப் பெரு மகளுர் முய்ல் ஃபெர்ரி(Jules Ferry) என்ற நல்லவர். அவர் படம் அன்று திறக்கப்பட்டது. அன்று திறந்த அதேபடம் இன்றும் வ.உ.சி. உயர்நிலைப்பள்ளியில் உள்ளது. அந்த விழாவுக்காகத்தான் சுயர் கூப் பள்ளிக்கூட மாண வர்கள் அன்று நடித்தனர், கதைவசனம் எழுதியவர்என் தந்தையார்; பாடல்கள் எழுதியவர் பாவேந்தர் பாரதி தாசனர். நாடக ஒத்திகை எங்கள் வீட்டில் நடக்கும். பாரதிதாசனர் என் தந்தையாரின் நண்பர்; ஒருசாலே மாளுக்கரும்கூட. இருவரும்பேராசிரியர் பங்க்ாரு பத் தரிடம் பயின்றவர்கள். அதனுல் ஒத்திகை பார்க்கப் பாரதிதாசனச் எங்கள் வீட்டுக்கு வருவார். காலில் பாந்துரப்ள்"(Pantoufle)ஆடைகதர்.அமெரிக்கன் கிராப். சுறுக்கான அரை மீசை. உதட்டில் ஓர் இளநகை. கனிந்த பார்வை. அந்த இளநகையை இன்றுவரை எந்த ஆடவரிடமும் கண்டதில்லை. சிவகுரு' என்ற இனிய குரலை எழுப்பிக்கொண்டே உள்ளே வருவார். எங்கள் வீடு குசக்கடை வீதியில்-அதாவது இன்றைய அம்பலத்தாடு ஐயர் மடத்து வீதியில் ஒருசிறு வீடு. ஒரே ஓர் அறைதான் உண்டு. அந்த அறையில் ஒரு கைப்பிடி நாற்காலியில், ஒருகால் நாற்காலி மேலும் ஒருகால் கீழுமாக கம்பீரமாகச் சாய்ந்து உட்காருவார். அவர் ராஜமிடுக்கோடு உட்கார்ந்திருப்பதை-பின்னல் தீட்டப் போகும் அந்த அழகோவியத்தை-என் இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு தலைசாய்ந்து ரசிப்ப்ேன். டேய் நீ பாடுவியா?’ என்று கேட்டார். "பாடுவேன்' என்று நான் தலையசைத்தேன். பாடச்சொன்னர். எஸ்.ஜி. கிட்டப்பா அவர்கள் பாடியிருந்த எவரனி" என்ற தெலுங்குப் பாட்டைப் பாடினேன். அவருடைய உதட்டில் ஒர் புதிய நகை அரும்பியது. என்னைக் கூர்ந்து பார்த்தார். "நான் ஒரு பாட்டு சொல்லித் தரேன்; பாடுறியா?’ என்ருர். 'உம்' என்றேன்.

  • Pantoufle- slipper. 13GTGG & Ggarsi).