பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hğilsonu: கல்லறையில்/130 அண்டை வீட்டின் அறையிலிருந்து பழுத்துக் காய்ந்த பனைஓலைமேல் கூடல்வாய்த் தண்ணிர் கொட்டும் ஓசை வந்தது, சென்று பார்த்தேன் இந்திப் பாடம் 'ನ್ತಿ? ஈச்வரே, அறைக்குள் யாழிசை ஏதென்று சென்றே எட்டிப் பார்த்தேன், பேத்தி நெட்டுருப் பண்ணினுள் நீதிநூல் திரட்டையே. so என் சின்னத் தம்பி சேரன் பிறந்த பிறகு முத்தியால் பேட்டையில் இருக்கும் என் தாத்தாவின் மற்ருெரு வீட்டில் நாங்கள் குடியமர்த்தப் பட்டோம். தாத்தாவும் அம்மாயியும் சேர்ந்து செய்த ஏற்பாடுஇது. அங்கு கொஞ்சநாள் வரை மின்சார வசதியில்லாமல் இருந்தது. அதல்ை தாத்தா மிகவும் பாதிக்கப்பட்டார். எப் போதும் அவருக்கு மின் விசிறி ஓடிக் கொண்டிருக்க வேண்டும். சென்னையிலிருந்து அவர் வரும் போதெல் லாம் எங்களிருவரையும் பனைமட்டைவிசிறியால் விசிறச் சொல்வார். என்னை அன்பாக "சின்னக் குட்டி' என்றே அழைப்பார். தம்பியை மொட்டைப்பையா என்று அழைப்பார். விசிறியை எடுத்து 10போடு என்பார். 10போடு என்ருல் 10தடவை விசிறு என்று அர்த்தம், நாங்கன் 1,2,3,4,5 என்று விசிறும் போது எண்ணிக்கையை மறந்துவிட்டு10 தடண்வக்குமேல் 100 தடவை விசிறி விட்டுப் போதுமா தாத்தா?’ என்று கேட்போம், தாத்தாவும் மனமிரங்கி போதும்மா’ என்று கூறி அவிழ்தது'விட்டு விடுவார். இப்பணியில் தம்பி ஒத்துழைக்கமாட்டான். 'போ தாத்தா! எப்பப் பாத்தாலும் விசிறு விசிறு என்று சொல் லிக்கிட்டு' என்பான் . நான் மட்டும் பொறுமையுடன் செய்து முடிப்பேன். இவ்வாறு சிறுவர்களுக்காகவும், தமிழுக்காகவும், பகுத் தறிவுக் கொள்கைகளைப் பரப்புவதற்காகவும், தமிழ் மண்ணில் தோன்றித் தமிழால் உயர்ந்து, தமிழை உயர்த்திய பாவேந்தர் அவர்களின் பேத்தியாகத்