பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்/100 பாவேந்தர் பாரதிதாசன் ஓர் உலகக் கவி. அவர் ஓர் ஊருக்கும், ஒரு நாட்டுக்கும் மட்டும் உரிமையுடையவ ரல்லர். எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள் தனை யீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னல் தினையளவு நலமேனும் திடைக்கு மென்ருல் செத்தொழியும் நாளெனக்குத் திருநாள் ஆகும் என்று பெருமிதத்தோடு தமிழினத்துக்காகப் பாடிய அதே கவிஞர். தூயஉள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம் தொல்லுக லமக்களெல்லாம் "ஒன்றே என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே. என்று உலக மக்களுக்காகவும் பாடுகிருர். அவர் உள்ளம் வியப்பானது. அவர் உள்ளத்தின் இரகசியங் களை நாம் ஆய்ந்து உணர வேண்டும். அம்முயற்சியின் விளைவே இக்கட்டுரை. அவர் வாழ்க்கைக் கடலின் ஓரத் தில் விளையாடித் திரிந்த நான் அக்கடலிலும் மூழ்கிச் சில முத்துக்களை எடுத்து வழங்கியுள்ளேன். so மனித நாகரிகம் ஆற்ருேரங்களில் ஆரம்பமானது என்று ஆய்வாளர்கள் கூறுவர். காவிரி, தென்பெண்ணை ஆறுகள் தமிழ் மன்னர்களின் பெருமையையும் பண் பாட்டையும் உந்திச்சுழித்து ஓடுபவை. எனவே ஆற்றங் கரைகளில் அமைந்த சிற்றுார்களில் தம் மூன்று பெண் களுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார் பாவேந்தர். திருச்சி மாவட்டத்தில் காவிரிக் கரையில் அமைந்த சிற்றுார் "கட்டிப்பாளையம்’. அந்த ஊரைச் சேர்ந்த புலவர் கண்ணப்பருக்குத் தம் மூத்தமகள் சரசுவதியைத் திருமணம் செய்து கொடுத்தார். இரண்டாவது மகள் வசந்தாவை தென் பெண்ணையாற்றங் கரையில் உள்ள "மேல்பட்டாம் பாக்கத்தில்’ என் அண்ணன் தண்ட பாணி அவர்கட்குத் திருமணம் செய்து கொடுத்தார். மூன்ரும் மகள் இரமணியை சேலம் மாவட்டத்துக்