பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 327 நீயும் ஏதோ சேஷ்டை பண்ணியிருக்கிறாய் போலிருக்கிறது. அவர் உன்மேல் இடித்ததற்கு பதில் நீயும் ஏதாவது சைகை செய்தாயோ? தனம்:- ஆம்; அவருக்கு என் மேல் ஆசையிருந்தால், அதை நிறைவேற்றி வைக்க எனக்கும் இஷ் டந்தான் என்பதைச் சில குறிப்புகளால் நானும் வெளிப்படுத்தினேன். அம்மாளு:- காரியம் எப்படித்தான் முடிந்தது? தனம்:- உன் விஷயத்தில் அவர் எப்படி நடந்து கொண்டாரோ அப்படியேதான் என் விஷயத்திலும் நடந்து கொண்டார். அம்மாளு :- நான் மறுபடியும் நேற்று ராத்திரிகூட, என்னாலான வரையில் பிரயாசைப்பட்டுப் பார்த்தேன். முந்திய நாள் ராத்திரி நான் ஒருவேளை தூக்கத்தினால் அப்படி ஆடி விழுகிறேனோ என்று அவர் நினைத்துக் கொண்டிருந் தாலும் இருக்கலாம் என்ற எண்ணம் உண்டாயிற்று. ஆகையால், நான் நேற்று ராத்திரி என்னுடைய கருத்து இன்னது என்பது அவருக்குச் சந்தேகமற விளங்கும்படியும், நான் தூக்கத்தினால் மெய் மறந்து அப்படிச் செய்யவில்லை என்பதை அவர் உணரும்படியும் நான் மறுபடியும் சைகை செய்தேன். ஆனால், காரியம் பலிக்காமலே போய் விட்டது. நேற்று ராத்திரி இந்தச் சத்திரத்தின் வாசலில் வந்து இறங்கியபோது எதிரில் வெளிச்சம் இருந்ததல்லவா? அப்போது அவருடைய முகத்தில் விழிக்க மனம் நிரம்பவும் கூசியது; இருந்தாலும், அவருக்கு முன்னால் நான் என் அவமானத்தைக் காட்டிக் கொள்ளாமல் சமாளித்துக் கொண்டேன். தனம் :- நேற்று ராத்திரி என்னிடத்தில் கூட இவர் அப்படியே தான் நடந்து கொண்டார். உண்மையிலேயே இவர் உலகைத் துறந்த சந்நியாசியாகவாவது அல்லது பேடியாகவாவது இருப்பாரோ? இல்லாவிட்டால் இவர்