பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பூர்ணசந்திரோதயம்-2 சங்கதி சொல்லிய பிறகே இது நடந்திருக்க வேண்டும் என்று நீர் நினைத்தது சரியான விஷயம். உம்முடைய புத்திக் கூர்மையை நான் நிரம் பவும் மெச்சுகிறேன். நானும் இளவரசரும் அதைப் பற்றி எவ்வளவோ யோசித்து யோசித்துப் பார்த்தோம். நீர் சொன்ன சூசனை எங்களுக்குப் படவே இல்லை. ஒரு குறிப்பும் இல்லாமல் எதைக் கொண்டு இவர்களைக் கண்டுபிடிப்பது என்று நாங்கள் நம்பிக்கை அற்றிருந்தோம். இப்போது எல்லா விஷயமும் சுலபமாகத் தோன்றுகிறது. சரி; இருக்கட்டும். மற்ற விவரங்களைச் சொல்லும்' என்றார். இன்ஸ் பெக்டர் மேலும் பேசத் தொடங்கி, நான் என்னுடைய சுயரூபத்தோடு போனால், ஜனங்கள் சந்தேகப்பட இடம் உண்டாகும் என்று நினைத்து, உடைந்து போன இரும்பு பித்தளை சாமான்களுக்குப் பேரீச்சம்பழம் விற்கிற ஒரு கிழவன் மாதிரி நான் மாறுவேஷம் போட்டுக் கொண்டேன்; அழுக்கு அடைந்த கிழிந்த துணியினால் முண்டாசு கட்டிக் கொண்டேன்; நெற்றியில் நன்றாக நாமம் போட்டுக் கொண்டேன்; நரைத்துப்போன மயிர்களால் ஆன மீசை தாடிகளை முகத்தில் ஒட்டவைத்துக் கொண்டேன்; அழுக்கு அடைந்ததும், பலவிடங்களில் கிழிந்து போனதுமான ஒரு சட்டையையும் வேஷ டியையும் அணிந்து கொண்டு கொஞ்சம் பேரீச்சம்பழம், திராசு, படிக்கல்கள், பழயை இரும்பு பித்தளை சாமான்கள் முதலியவைகளை ஒரு மூங்கில் தட்டில் வைத்துக் கொண்டு நான் அம்மன் பேட்டைக்குப் ப்ோய்ச் சேர்ந்தேன். சேர்ந்து, அன்னத்தம்மாளுடைய வீடு இருந்த தெருவிற்குள் நுழைந்து பகல் இரண்டு மணி சமயத்தில் பேரீச்சம் பழம் விற்றுக் கொண்டே போனேன். அன்றைய தினம் காலையிலிருந்து, வேண்டும் என்றே, நான் எவ்வித ஆகாரமும் சாப்பிடாமல் போயிருந்தேன். ஆகையால், பசி தாகங்களினால் நான் மிகவும் களைத்துச் சோர்வடைந்து இருந்ததால் நான் மூன்று நாட்களாகப் பட்டினி கிடந்தவன்