பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 159 வந்து திண்ணையில் போட, நானும் அவனும் படுத்துக் கொண்டோம். திண்ணை நிரைச்சலினால் மறைக்கப் பட்டிருந்தது. அவன் படுத்துக் கொண்டான்; அவனுக்கு அப்பால் நான் படுத்துக்கொண்டேன். கொஞ்ச நேரத்தில் நாங்கள் இரண்டு பேரும் தூங்கிப்போய் விட்டோம். ராத்திரி சரியாக ஒருமணி சமயம் இருக்கும்; ஒரு முரட்டு மனிதன் வந்து, திண்ணையில் முதலில் படுத்திருந்தகந்தனை மெதுவாகத் தட்டி எழுப்பினான். நான் உடனே விழித்துக் கொண்டேன். ஆனால், அவன் கந்தனை மிகவும் ரகசியமாகக் கூப்பிட்ட மாதிரியைக் காண, எனக் கு ஏதோ ஒரு வித சந்தேகம் தோன்றியது. அந்த மனிதன் யார் என்று நான் உற்றுப் பார்த்தேன். அவன் கட்டாரித்தேவன் என்ற எண்ணம் உண்டாயிற்று; ஆகையால் அவர்கள் என்ன பேசுகிறார்கள், அல்லது, என்ன செய்கிறார்களென்பதைக் கவனிக்க வேண்டும் என்ற தீர்மானத் தோடு நான் கண்களை மூடிக் கொண்டு தூங்குகிறவன் போலப் பாசாங்கு பண்ணினேன். அவன் மறுபடியும் கந்தனைத் தட்டி எழுப்ப, அவன் திடுக்கிட்டு விழித்து எழுந்து உட்கார்ந்து, “ஒகோ கட்டாரியா வாப்பா ஏது இந்நேரத்துலே வந்தது! அவரசசோலி ஏதாவது உண்டா?’ என்று மெதுவாகப் பேசினான். கட்டாரித்தேவன் ஏதோ ரகசியமான விஷயத்தைப் பற்றி அவனோடு பேசவிரும்புகிறவன்போலக்காண்பித்துக்கொண்டு என் பக்கம் திரும்பி, 'அது யார்?' என்று தணிவாகக் கேட்க, உடனே கந்தன், 'அவனும் நம்முடைய மனிதன்தான். அவனைப்பற்றி யோசனை பண்ணவேண்டாம். சங்கதியைச் சொல்லலாம்' என்றான். அதற்குள் திண்ணையில் உட்கார்ந்து கொண்ட கட்டாரித்தேவன், 'அது யாரப்பா அவ்வளவு நம்பிக்கையான புது சிநேகம்? இதுவரையில் இந்த மனிதனைப் பற்றி நீ என்னிடம் எவ்வித பிரஸ்தாபமும் செய்ததில்லையே! ஆசாமி யாரப்பா?" என்று ஆச்சரியத்தோடு கேட்டான். உடனே 匙.夺。翟一售