பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 323 தலை பின்னிக்கொண்டும் மையிட்டுப் பொட்டிட்டுத்தங்களை அலங்கரித்துக்கொண்டும் இருந்தனர். அப்போது மூத்தவளான அம்மாளு என்பவள் தனது தங்கையை நோக்கி, 'தனம்! நமக்குத் துணையாக வந்த மனிதர் இருக்கிறாரே, அவரைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?" என்ற தணிவான குரலில் வினவினாள். அதைக் கேட்ட தனத்தின் முகம் ஆனந்தத்தினால் மலர, அவளது அழகிய கண்கள் ஜ்வலித்தன. அவள் கொஞ்சலாகப் புன்னகை செய்தவண்ணம் தனது அக்காளை நிரம் பவும் செல்வமாகப் பார்த்து, 'நானும் எத்தனையோ பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளைகளைப் பார்த்திருக்கிறேன்; நம்முடைய அரண்மனையிலுள்ள ராஜவம்சத்து யெளவனப் புருஷர்கள் எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். என்ன இருந்தாலும், இவ்வளவு வசீகரமான முகமும் அற்புதமான அழகுடைய புருஷனை நான் இதுவரையில் பார்த்ததே இல்லை. இவரையும் பார்த்து, நம்முடைய இளவரசரையும் பார்த்தால், இவரை மன்மதன் என்று சொல்ல வேண்டும். இளவரசரை ஒரு பெரிய பூதமென்றே சொல்ல வேண்டும்' என்று நிரம்பவும் கனிவாகவும் சந்தோஷமாகவும் மொழிந்தாள். அம்மாளு:- (சிரித்துக்கொண்டு வேடிக்கையாகப் பேசத் தொடங்கி) ஓகோ அப்படியா சங்கதி. இவ்வளவு சீக்கிரத்தில் அவர் சொக்குப்பொடி போட்டு உன்னை மயக்கிவிட்டாரே! நீ சொல்வதைப் பார்த்தால், அவர் சம்மதித்தால், நீ அவரைக் கட்டிக் கொள்வாய் போலிருக்கிறதே! தனம்:- (சந்தோஷமாக நகைத்து) ஒ! ஆட்சேபனை என்ன! கரும்பு தின்னயாராவது கூலி கேட்பார்களா? ஒருநாளுமில்லை. அவர் என்னைச் சும்மா கட்டிக் கொள்வதானால், நான் இரட்டை சந்தோஷத்தோடு அதை ஏற்றுக்கொள்வேன். ஆனால், அவர் எனக்குத் தாலிகட்ட மாத்திரம் நான் இணங்க மாட்டேன்.