பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 271 மகாராஜனுடைய மகள் என்பது தங்களுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம். அந்தப் பூனாதேசத்து மகாராஜன் இப்போது தேக அசெளக்கியம் அடைந்து நிரம்பவும் அபாய நிலைமையில் இருக்கிறாராம். அவரைப் பார்ப்பதற்காக, அவருடைய புத்திரியும் நம் இளவரசருடைய பட்டமகிஷியான லலித குமாரிதேவி என்னும் பதிவிரதா சிரோன்மணி பூனாவுக்குப் போய் மூன்று மாசகாலமாகிறது. நம் இளவரசருக்கு லலித குமாரிதேவி யிடத்தில் கொஞ்சமும் பிரியம் என்பதே இல்லை. அவர் அவளுடைய அந்தப் புரத்திற்குப் போகிற வழக்கத்தையே நிறுத்திவிட்டார். அப்படி இருந்தாலும், இளவரசருடைய தாயாரான பெரிய ராணிக்குத் தமது மருமகளிடத்தில் அத்தியந்தப் பிரியம் உண்டு. . பூனாவுக்குப் போயிருக்கும் லலிதகுமாரி தேவி தன்னுடைய பணிவிடைகளைச் செய்யத் தனக்கு நான்கு பணிப்பெண்களை அனுப்பி வைக்கும்படி இந்த ஊர்ப் பெரிய ராணிக்குக் கடிதம் எழுதியிருக்கிறாளாம். அதைப் பார்த்த பெரிய ராணி இந்த ஊரிலுள்ள தமக்குப் பழக்கமான அம்மணி பாயி என்ற ஒருத்தியை அழைத்துப் பூனாவுக்கு அனுப்ப நான்கு தாதிப் பெண்கள் தேவையென்றும், நல்லவர்களாகப் பார்த்து அழைத்து வரும்படியும் சொன்னார்களாம். அந்த அம் மணிபாயி சாதாரணமான மனிஷியல்ல. அவள் தன்னுடைய பாலிய காலத்தில் இந்த ஊர் இளவரசருக்கு உயிருக்கு உயிராக இருந்து அவரிடத்தில் கொள்ளையடித்து லக்ஷம் லக்ஷமாக சொத்தைச் சேர்த்தவள். ஆனால், அவளுக்கு இப்போது அதிக வயசாகிவிட்டதென்று, இளவரசர் அவளை அலட்சியம் செய்துவிட்டார். அவள் இளவரசரைக் கடைசிவரையில் தன்னுடைய வலையில் போட்டுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து ஏதேதோ சதியாலோசனை செய்துவருகிறாள். இந்த உலகத்தில் இதுவரையில் யாரும் பார்த்தறியாத அவ்வளவு அபரிமிதமான அழகும் புத்திசாலித்தனமும் ஸரஸ் குணமும் நிறைந்த ஒரு பெண்ணை அவள் எங்கிருந்தோ சம்பாதித்து. J.G.H-18