பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

முயற்சிகளோடு செய்யப்பட்ட ஆங்கிலக் கும்பினியின் முதல் தாக்குதல் ஒரு பயனையும் தராமல் பாழாய்ப் போயிற்று.

அடியும், அவமானமும் பொறுக்க முடியாமல் திரும்பிச் சென்ற கும்பினிப் படைகள் மறுபடியும் சில காலம் கழித்து வந்து, மதுரையைத் தாக்கின; முற்றுகையிட்டன. படைப்பலத்தால் போர் புரிந்து, வீரன் கான் சாகிபை வெற்றி கொள்ள இயலாது என்பதை உணர்ந்து, அவன் கோட்டைக்குள் துரும்பு கூட நுழையாதபடி இரும்புத் திரையமைத்து, முற்றுகையிட்டுப் பட்டினி போட்டு, அவன் ஆட்களைக் கொல்ல வேண்டும் என்று ஆங்கிலக் கும்பினியும், அதன் தளபதிகளும் தீர்மானித்தனர். கடுமையான முற்றுகை நடந்தது. அந்தோ! அந்த முற்றுகையால், கோட்டைக்குள் நேர்ந்த அவலங்களை வர்ணிக்க எந்தக் கவிஞனாலும் இயலாது. மதுரைக் கோட்டைக்குள் இருந்த பிரஞ்சுத் தளபதிகள் உண்ண உணவில்லாமல், குதிரைகளையும், கழுதைகளையும், ஏன், பூனைகளையும் கூடக் கொன்று தின்றார்களாம்! பெண்களும், குழந்தைகளும் பசியால் துடிதுடித்துப் புசிப்பதற்கு ஒன்றுமில்லாமல், கான் சாகிபின் காலடியில் பிணங்களாகி வீழ்ந்தார்களாம். வீழ்ந்த பிணங்களை ஒதுக்கித் தள்ளுவதற்கும் ஒய்வில்லையாம்; வழியில்லையாம். இச்செய்திகளை எல்லாம் தெரிந்து, மேலும், மேலும் தங்கள் முற்றுகையைக் கடுமையும், கொடுமையும் உள்ளதாக்கினர் ஆங்கிலக் கும்பினியார். தமிழ்நாட்டு வீரர்கள் குடிக்கக் கஞ்சியில்லாத நிலையிலும், வாயில்