பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 பூர்ணசந்திரோதயம்-2 ஜெமீந்தார்:- இதோ நம்முடைய தெற்கு வீதியில் ஜெகன் மோகன விலாசத்தில் பூர்ணசந்திரோதயம் என்று ஒருபெண் வந்திருக்கிறாளே. அவளைநீர்எப்போதாவது பார்த்திருக்கிறீரா? இன்ஸ் பெக்டர்:- ஒ! எத்தனையோ தடவை பார்த்திருக்கிறேன். ஜெமீந்தார்:- இந்த இரண்டு பேரில் யாரை உயர்வாக மதிக்கலாம்? பூர்ணசந்திரோதயம் அதிக அழகா? மாசிலாமணிப் பிள்ளையின் சம்சாரம் அதிக அழகானவளா? இன்ஸ்பெக்டர்:- ஸ்திரீகளின் அழகை ஒத்திட்டு எது உயர்வு எது தாழ்வு என்று சொல்ல எனக்கு அவ்வளவு திறமை போதாது. இருந்தாலும் அவளுடையது ஒரு மாதிரியான அழகு இவளுடையது வேறு மாதிரியான அழகு, அநேகமாய் இரண்டும் சமமாகவே சொல்லலாம். நான் பிறந்த முதல் இந்த இரண்டுபேரைப் போன்ற இவ்வளவு அபாரமான அழகு வாய்ந்த பெண்களைப் பார்த்ததே இல்லை. ஜெமீந்தார்:- ஒகோ அப்படியா இருக்கட்டும். ஆனால் அந்த மாசிலாமணிப்பிள்ளையின் சம்சாரந்தான் சல்லாயப்பட்டு அணிந்து பார்சீ ஜாதிப் பெண்போல வந்தவள் என்பது நிச்சயந்தானா? இன்ஸ்பெக்டர். அதைப்பற்றிக் கொஞ்சம் கூட சந்தேகம் தேவையில்லை. அவளேதான் வந்து ஏமாற்றினவள். ஜெமீந்தார்:- அப்படியானால், அவள் இளவரசரிடத்தில் காதல் கொண்டவள் போலப் பாசாங்கு செய்தது எல்லாம் தன் புருஷனுடைய சம்மதியின் மேலேதான் நடந்திருக்க வேண்டும்? இன்ஸ்பெக்டர்:- ஆம்; தடையென்ன? ஏதோமுக்கியமான தஸ்தாவேஜியில் இளவரசருடைய கையெழுத்தை வாங்க வேண்டும் என்பதே அவர்களுடைய முக்கிய நோக்கம். அதற்காக அந்த மனிதன் தன்னுடைய சம்சாரத்தை