பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் J01 மூவரும் அவனது வசீகரமான தோற்றத்தினால் கவரப்பட்டு இமை கொட்டாமல் அவனை உற்று நோக்குவதிலேயே தங்களது கவனத்தைச் செலுத்தி மெளனமாக இருக்க, முத்துலகஷ்மியம்மாள் மாத்திரம் அவனிடத்தில் பேசத் தொடங்கி ஏதோ சில கேள்விகளைக் கேட்டாள். அவன் அவர்களைப் பார்த்தவுடனே, அந்த மூன்று பெண்களும் அவர்களது சகோதரியான சிவ பாக்கியத்தைப் போலவே நற்குணமுடையவர்கள் என்றும், தங்களது தாயிடம், அதிக பயமுள்ளவர்கள் ஆகையால், அவர்கள் தாயின் சொல்லை மீறமாட்டாமல் தங்களது மனதிற்கு மாறாக அந்தக் காரியத்தில் இறங்கியிருக்க வேண்டும் என்றும் கலியாணசுந்தரம் அபிப்பிராயப்பட்டான்; ஆனால், அவர்களிடம் மூன்று நிமிஷ நேரம் பழகுவதற்குள், அவனது மனதில் முத்துலக்ஷ்மியம்மாள் விஷயத்தில் நிரம் பவும் கேவலமான அபிப் பிராயமும் அருவருப்பும் உண்டாகி விட்டன. ஏனென்றால், அவள் சாதாரணமான அற்ப விஷயத்தைப் பற்றிப் பேசும்போது கூட மிதமிஞ்சிய நாணமும், நடலமும் காட்டி நாடகத்தில் வேஷம் போட்டு ஆடுபவள் போல அபிநயங் காட்டி லாகஸ்ஞ் செய்தாள். ஆகையால், அவளைப் பார்க்கும்போதே அவள் கபடமும் வஞ்சகமும் நிறைந்த மனிஷி என்பதும் வெளிக்கு வேஷம் போட்டுத் தேன் போலப் பேசுகிறாள் என்பதும் எளிதில் தெரிந்து போயின. ஆனால், அவளது குணம் முழுதையும் உள்ளபடி அவன் தெரிந்து கொண்டு விட்டதாக நாம் சொல்ல முடியாது. அப்படி இருந்தாலும், அவன் அவளது விஷயத்தில் கொண்ட அதிருப்தியை வெளியில் காட்டாமல் எச்சரிப்பாக நடந்து கொண்டான். ஏனென்றால், ஆரம்பத்திலேயே தான் தனது அருவருப்பை வெளிப்படுத்தி விட்டால் தனது காரியம் கெட்டுப்போகும் என்று நினைத்து அதை மறைத்துக் கொண்டான். ஆனால், அவனைப் பார்த்தவுடனே அந்தப் பெண்டீர் நால் வரும் மிகுந்த மகிழ்ச்சியும் நல்ல அபிப்பிராயமும் கொண்டனர். அவனது உடம்பின்கட்டழகும்,