பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 203 நான் சுகமாக pவித்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய ஜாகையை நீங்கள் இப்போது சமீபகாலத்தில் பார்த்தில்லையே. நாலைந்து வருஷகாலத்துக்கு முன்தானே பார்த்தீர்கள். பழைய கட்டிடத்தை அடியோடு இடித்துவிட்டு இப்போது மூன்று உப்பரிகைகள் வைத்து வெகு ஏற்பாடாகக் கட்டி இருக்கிறேன். நீங்கள் என்னுடைய ஜாகைக்கு ஒரு நாளைக்குத்தான் வந்து பாருங்களேன். பழைய சிநேகிதர்களை இப்படி அடியோடு கைவிடுவது தருமமாகுமா? மாசிலாமணிப்பிள்ளை:- (மகிழ்ச்சியாக நகைத்து) ஒ! அவசியம் வருகிறேன். கரும்பு தின்னக் கூலி கேட்பதுண்டா! நீ மூன்று உப்பரிகைகள் வைத்துக் கட்டியிருப்பதாகச் சொல்வதைப் பார்த்தால், அது பெரிய அரண்மனைபோல இருக்க வேண்டுமே! ஹேமாபாயி:- நீங்கள் வந்துதான் பாருங்களேன். ஒவ்வோர் உப்பரிகையையும் சொர்க்க லோகம் போல அலங்கரித்து இருக்கிறோம். ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய தெய்வ தாசிகளைப் பழிக்கத்தக்க அற்புதமான அழகு வாய்ந்த பெண்களை எல்லாம் நீங்கள் அங்கே பார்க்கலாம். ஏதோ ஈசுவரன் ஏராளமாகப் பணம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறான். அதைச் செலவு செய்து இப்படி ஒரு வீடு கட்டினேன். பணம் ஏராளமாக வந்து கொண்டிருந்ததால், அதை என்ன செய்யவேண்டுமென்பது கூடசில சமயங்களில் தெரியமாட்டேன் என்கிறது. மாசிலாமணிப்பிள்ளை (நயமாகப் புன்ன்கை செய்து) ஒகோ அப்படியா சங்கதி! நீ எப்போதும் அதிர்ஷ்டசாலிதான். எந்தத் தொழிலுக்குப் போனாலும், அதிர்ஷ்டம் வேண்டும். உன்னிடம் மேன் மேலும் வந்து குவிந்து கொண்டிருக்கும் பணத்தை என்ன செய்வது என்பது உனக்குத் தெரியவில்லை. எங்களைப் போல இருக்கிறவர்களுக்குப் பணம் இருக்கிற இடமாவது, அதைச்சம்பாதிக்கிற விதமாவது தெரியமாட்டேன்