பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுச் சிந்தனைகள் 3 5.

துய்மையும் வாய்மையும்

உடல் அழுக்கு நீங்கினல் தூய்மை நிறையும்.

மன அழுக்கு நீங்கினல் வாய்மை கிடைக்கும்.

விள யாட்டுக் கல்வி

கல்வி மனதைப் பண்படுத்துகிறது. விளையாட் டோ, மனதைப் பண்படுத்துவதுடன் உடலையும் பண்படுத்துகிறது. பதப்படுத்துகிறது. இதப்படுத்து கிறது சுகப்படுத்துகிறது.

மணியான உடல்

உடைந்த மணியில் எவ்வாறு இனிமையான ஒலி எழும்பாதோ அது போலவே நலிந்த உடலி லும் நல்ல மனம் அமையாது. நல்ல வாழ்வும்

அமையாது.

தேவையும் சேவையும்

உடற்பயிற்சியை அதிகமாகச் செய் ஆனல் தேவைக்கு மேலே மிகுதியாகச் செய்து விடாதே! அளவுக்கு மேல் பயிற்சி செய்வது, சோம்பலா யிருப்பதை விட கொடுமையானதாகும். துன்பம் பயப்பதாகும்.

முடவனின் பரத நாட்டியம்

கோடை காலத்தில் சேர்க்கிறவன் புத்தி யுள்ளவன். மழை காலத்தில் உண்பதற்காக அலை கிறவன் முட்டாள் என்பது பழமொழி. வெயில் காலத்தில் சேர்த்து வைத்திருந்தால் தானே மழை