பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தருவ தத்தை இலம்பகம்51



“கணிகையாயின் எனக்கு அவளைக் காணிக்கை ஆக்கிவிடு” என்றான்.

“கலுழவேகனின் காரிகை அவள்; அவள் ஒரே மகள்: வித்தியாதர அரசனின் மகள்; அவளுக்கு மணம் முடிக்க வேண்டும்; வீணை நாயகி அவள்; அவளை வெல்பவனே அவளுக்கு வாழ்க்கை நாயகனாக முடியும்; இசைப் போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யவேண்டும்; அதற்குத் தங்கள் அனுமதி வேண்டும்.”

“அனுமதி என்ன வெகுமதி கூடத் தருகிறேன். இசை விழா ஒன்று நம் ஊர்மிசை நடந்தால் அது நமக்குத் தானே புகழ், பல தேசத்து மன்னர்கள் அவர்கள் இங்கு வந்து இசைப் போட்டியில் பங்கு பெறுவர்; பாடினால் அவர் அவர்களுக்குப் பரிசு, தோற்றால் அவர்கள் வெறும் தரிசு; தக்கபடி ஏற்பாடுகள் செய்க, அதற்கு நான் தலைமை தாங்குகிறேன். மிக்க மகிழ்ச்சி; நானும் பங்கு பெறுவேன்; எனக்கு அவள் கிடைப்பாள்; என்ன செய்வது? நான் முந்திப் பிறந்து விட்டேன்; வயது ஒத்து வராது; மேலும் இசைபாடக் கற்றிலேன், வசைபாடிப் பழகிய யான் எப்படி இசைபாட முடியும்; மற்றும் அவள் எனக்கு இசையாள்; கலுழவேகன் மாபெரும் மன்னன்; படை வலிமிக்கவன்; அவனை நட்பில் கொண்டால் அதைவிடப் பெட்பு வேறு இருக்கமுடியாது; தக்க சமயத்தில் அவன் நமக்குப் பயன்படுவான்; இந்த ஊரில் பெண்ணைக் கொடுத்து விட்டால் அவன் இங்கு அடிக்கடி வந்து போவான்; அதனால் நமக்குப் பெருமைதானே! அறிவிப்புத் தாளில் என் தலைமை என்பதைத் தவறாமல் பொறித்து வை; இந்த ஊரில் முத்தமிழ் மன்றங்கள் இருக்கின்றன. அதில் நற்றமிழ் பேசப்படுகிறது. அதற்குக் கூட்டமே வருவது இல்லை. இசையவர் பாடல் பாடி மகிழ்விக்கவும், ஆடல் நங்கையர் ஆடிக் காட்டவும் அழகிய மாமணி மண்டபம் இல்லை, அந்தக் குறையும் தீர்ந்துவிடும். காந்தருவதத்தை பாடுகிறாள்