பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பூர்ணசந்திரோதயம்-2 பித்தளை சாமான்களைக் கொடுத்துப் பேரீச்சம்பழம் வாங்கிக் கொண்டு போனார்கள். நான் உட்கார்ந்திருந்த வீட்டில் இருந்து ஒர் ஆண் பிள்ளையும், அவனுடைய பெண்டு பிள்ளைகளும் வெளியில் வந்து தங்களுடைய வீட்டில் இருந்த உடைந்த வஸ்துக்களை கொடுத்துப் பழம் வாங்கினார்கள். அந்த மனிதன்தான் கந்தசாமி வாண்டையான் என்று நான் யூகித்துக்கொண்டு மற்றவர்களுக்குக் கொடுத்ததைவிட அவனுக்கு அதிகமாகப் பழம் கொடுத்தேன்; அவனும் அவனுடைய பெண்ஜாதியும் பிள்ளைகளும் நிரம்பவும் சந்தோஷம் அடைந்ததன்றி என்னிடத்தில் பிரியமாகப் பேசினார்கள். அவர்களுடைய வீட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் தேடிப்பார்த்து அவர்களுடைய கையில் அகப்படக் கூடிய சாமான்களை எல்லாம் கொண்டு வந்து போட்டுப் போட்டு மேன்மேலும் பழம் வாங்கிக் கொண்டார்கள். நானும் பழத்தைத் தாராளமாக அள்ளி அள்ளிக் கொடுத்துக்கொண்டே வந்தேன். மற்றவர்களுக்குக் கொஞ்சமாகக் கொடுத்ததையும் அவர்கள் கண்டுகொண்டார்கள். ஆகையால், அவர்கள் என்னை ஒரு ஆப்த சிநேகிதனைப் போல மதித்து என்னிடத்தில் அன்பாகப் பேசியதன்றி, மற்ற ஜனங்கள் போனபிறகு, என்னுடைய சொந்த ஊர் முதலிய விவரங்களையும் யோக rேமங்களையும் விசாரிக்கத் தொடங்கினர். நான் இருப்பது தஞ்சாவூர் ஆட்டுமந்தைத் தெருவில் என்றும், நானும் வாண்டையார் ஜாதியைச் சேர்ந்தவன் என்றும், பெரிய குடும்பஸ்தன் என்றும், பேரீச்சம்பழ வியாபாரத்தில் நஷ்டமே வருவதன்றி லாபம் வருகிறது இல்லை என்றும், வேறே என்ன தொழில் செய்கிறது என்பது தெரியாமையால் நான் அந்தத் தொழிலை விடாமல் செய்து வருவதாகவும், நான் சாப்பிட்டு இரண்டு தினங்கள் ஆயின என்றும், பசியினால் நிரம்பவும் தள்ளாடுவதாகவும் சொல்லி அந்த ஊரில் ஏதாவது சோற்றுக்கடை இருக்கிறதா என்று கேட்டேன். கந்தன் என் விஷயத்தில் நிரம் பவும் இரக்கம் கொண்டு, அந்த ஊரில்