பக்கம்:காவியக் கம்பன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 I வாழிவரையின் மணித்தாம்பே புரமெரித்த பொற்சிலையின் நானே பாரைச் சமந்த படாபடமே சங்கரா பரணமே சங்கடம் தீராயோ நஞ்சே நாகவிடமே நாணி நடவாயோ ஏறிய பாம்பே இறங்குக இறங்குக ராமாய ராம பத்ராய ராகவம் ராமாய ராமச்சந்திராய ராகவம் என்றதும் நீலம் பூத்து கிடந்தபிள்ளை நிமிர்ந்தான் எழுந்தான் அந்தணர் வியந்தார் நாகபாசப் படலத்தின் சில வரிகளே நமன் வாயிலிருந்து மீட்டதென்றுணர்ந்தனர் ஆயிரக்கால் மண்டபத்திலிருந்து பன்னிராயிரம் பாடலும் கேட்டனர் கம்பராமனுக்குப் பாயிரம் கூறினர் கம்பருக்கு விருந்தும் விழாவும் துாளிபட்டது திரு நறுங் கொண்டைச் சமணர்களும் போற்றினர் இகபரம் இரண்டுக்குமான சிதம்பரத்திலிருந்து திருவரங்கத்துக்கு திரும்பினர் கம்பர் வேதம் தமிழ்செய்த மாறனைப் பாடினையோ என அரங்கன் கேட்டதாக உள்ளுணர்வு உணர்த்திற்று ஒருநூறு கலித்துறை சடகோபர் அந்தாதி ஆயிற்று பட்டர்களும் பரவசம்.ஆர்ை கம்பரின் பெருமைக்குப் பெருமைசெய்ய பூரீமன் நாதமுனிகள் வந்தருளினர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியக்_கம்பன்.pdf/63&oldid=796887" இலிருந்து மீள்விக்கப்பட்டது