பக்கம்:கண்ணகிக் கதை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

வில்லுப்பாட்டு தமிழகச் சிற்றுார்களில் இந் நாளிலும் பாராட்டப்பெறும் நல்லிசையாகும். பல்வகைக் கதைகள் வில்லுப்பாட்டாகப் பாடப்பெற்று வருகின்றன. பெரும்பாலும் வில்லிசை சிறுதெய்வ வழிபாட்டுக் காலங்களிலேயே பெரிதும் பயின்றுவந்தமையால் கதைகளும் சிறு தெய்வக் கதைகளாகவே விளங்கின. வில்லிசையைத் தமிழ்மக்கள் அனைவரும் கேட்டுப் பயன் எய்தப் புத்தம் புதுக் கருத்துகளுடன் உணர்வூட்டும் வரலாறுகளும் அவ்விசைப் பாடல்களாக அமைக்கப்பெறல் வேண்டும். அத் துறையில், புலவர் நவநீதகிருட்டிணனாரின் முதன் முயற்சியாகிய 'தமிழ் வளர்ந்த கதையும்' அடுத்த 'திருவள்ளுவர் கதையும்' நம் கழகவழி வெளிவந்தன. இப்போது. கற்புக்கடம்பூண்ட பொற்புடைச் செல்வியான 'கண்ணகி கதை' வில்லுப்பாட்டு வரிசையின் மூன்றாவது நூலாக வெளியிடப்பெறுகின்றது. தமிழகம் விருப்புடன் ஏற்று மகிழும் என நம்புகின்றோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/4&oldid=1296227" இலிருந்து மீள்விக்கப்பட்டது