பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

சு. சமுத்திரம்

169



9. சாமியாடிகள் (கிராமங்களில் ஏற்படும் ஆடியோ-வீடியோ தாக்கங்கள்) மீனாட்சி புத்தக நிலையம் மதுரை, 1991. 10. தாழம்பூ (சாராயத் தொழிலில் இருந்து விடுபடும் ஒரு சேரிப் பெண்ணின் சிக்கல்கள் - சென்னை வானொலி ஒலிபரப்பு) மணிவாசகர் பதிப்பகம், 1992 11. மூட்டம் (அயோத்தி மசூதி தகர்ப்பை அடுத்து ஒரு இஸ்லாமிய கிராம மக்கள் சந்தித்த இடர்பாடுகள்-சென்ற ஆண்டு, சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் விடியல் கலைக்குழுவினரால் நாடகமாய் நடந்தது) அன்னம் வெளியீடு, 1994 ஏகலைவன், 1996, 12. அவளுக்காக (திரைப்பட தயாரிப்பு என்ற பெயரில் சீரழிந்த ஒருவனின் கதை) வானதி பதிப்பகம், 1992, 13. வாடாமல்லி (அலிகளைப் பற்றிய மனிதநேயச் சித்தரிப்பு - ஆதித்தனார் இலக்கியப் பரிசு பெற்ற படைப்பு) வானதி பதிப்பகம், 1994-1996, 14. பாலைப்புறா (ஒரு அப்பாவி எய்ட்ஸ் நோயாளிப் பெண்ணின் போராட்டக் கதை) சென்னை வானொலி நிலைய வாசிப்பு. ஏகலைவன் பதிப்பகம், 1998. குறுநாவல்கள் 1. புதிய திரிபுரங்கள் (+ கேள்வித் தீ) (ஒரு ஆன்மீகவாதி போராளியாவதையும், பள்ளிக்கூட நிர்வாகச் சீரழிவுகளையும் சித்தரிப்பவை. மணிவாசகர் பதிப்பகம், 1982 கங்கை புத்தக நிலையம், 1997. 2. சோற்றுப் பட்டாளம் (+ உயரத்தின் தாழ்வுகள் +காமனை அறிந்த ஈசன்) (ஒரு கிழவருக்கு திச்சயித்த இளம்பெண்ணின் போராட்டம். மலைமக்களின் போராட்டம், பாதுகாப்பின்மையை பாலியலாக கருதும் ஒரு பெண்ணின் மனச்சிக்கல் - சோற்றுப் பட்டாளம் சென்னை தொலைக்காட்சியில் முதன்முதலாக எடுக்கப்பட்ட முழு நீள நாடகம். கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1977, மணிவாசகர் பதிப்பகம், 1982. கங்கை புத்தக நிலையம், 1997,