பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

ஒருவர்க் அடிமைப்படுதலை எக்காலத்திலும் விரும்பிலர் என்பது புலனாகிறது. அடிமைகளுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை மிகக் கொடூரமானது. அடிமைகள் எப்போதேனும் சாட்சி சொல்ல நேர்ந்தால் அச்சாட்சியில் உண்மை வெளிவரும் வரையில் அவர்கள் பெரிதும் துன்புறுத்தப்பட்டனர்.

பல அடிமைகள் கொடுமைகள் அனுபவித்தாலும், அவர்களையும் காக்கச் சில சட்டதிட்டங்களும் ஏதென்ஸ் நகரில் இருந்தன. உடையில் அடிமைக்கும் அடிமையில்லாத குடிமகனுக்கும் வேறுபாடு இராது. இருவரும் தெருவில் செல்லும்போது, யார் அடிமை என்று தீர்மானிக்க முடியாது. எந்த அடிமையும் தூக்குத் தண்டனை பெறமாட்டான். அவனுக்குச் சிறைவாசம் மட்டும் கிடைக்கும். ஏதென்ஸ் நகரில் பிரம்பால் அடித்துத் தண்டிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அதனை ஓர் அடிமை பெற நேர்ந்தால் ஐம்பது அடிக்குமேல் இருத்தல் கூடாது என்னும் சட்டமும் அவர்கள் கொண்டிருந்தனர். அடிமைகள் எனப்படுவோர் உடையும் உணவும் பெறுபவரே அன்றி ஊதியம் பெறுபவரல்லர். ஆனால் சிற்சில அடிமை ஆட்கள் தம் மனம் வஞ்சியாது உண்மையாகப் பணிபுரியின், அதனைப் பாராட்டி ஊதியம் அளித்தலும் ஏதென்ஸ் நகரத்தில் இருந்து வந்தது.

வீட்டில் வேலை செய்யும் அடிமைகள் அடிமைகளாகக் கருதப்படாமல் குடும்பத்தில் சேர்ந்த ஒருவராகவே கருதப்பட்டனர். வீட்டு வேலை யாவற்றையும் அவர்கள் கையில் ஒப்படைப்பதும் உண்டு