பக்கம்:தாய்லாந்து.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆக, கிளார்க் போல, டைப்பிஸ்ட் போல, நர்ஸ் வேலை பார்ப்பது போல தாய்லாந்தில் விபசாரமும் கிட்டத்தட்ட சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழிலாக கருதப்படுவது எனக்கு வியப்பாயிருந்தது.

டுத்தாற்போல் நாங்கள் சந்தித்து குவான் சுயாங்கான் குடும்பம். கிட்டத்தட்ட உசன் குடும்பத்துக் கதை போலவே தான்.

அவர்கள் கிராமத்திலிருந்து ‘பாங்காக்’ போன முதல் பெண் குவானின் மகள்தானாம்.

உசன் டவுட்டா மாதிரி இவர் தயக்கம் காட்டவில்லை. சற்று வேகமாகவே பேசினார். தீரமான குரல்.

“என்னால் வெளியே தலை காட்டவே முடியவில்லை. கண்டபடி என்னைத் தூற்றினார்கள். வெகு காலம் நான் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தேன். பின்னர் என் மகள் பாங்காக்கிலிருந்து பணம் அனுப்ப அனுப்ப, என்னைத் தூற்றியவர்களெல்லாம் இப்போது மனம் மாறி என்னோடு பழையபடி பழக ஆரம்பித்திருக்கிறார்கள்.

“உங்கள் மகள் பற்றி அவர்கள் இப்போது கமெண்ட் ஏதும் அடிப்பதில்லையா?”

“எப்படி அடிக்க முடியும்? அவர்கள் வீட்டுப் பெண்களும் தான் இப்போது பாங்காங் போய்விட்டார்களே!“சிரித்தார்.

“நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

“இப்போது எங்கள் கிராமத்தில் இளம் பெண்கள் யாருமே கிடையாது. எல்லோருமே பாங்காக் போய் விட்டார்கள். அது மட்டும் அல்ல. கிராமத்துக் கூரை வீடுகள் எல்லாம் இப்போது மாடி வீடுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. எல்லாம் பாங்காக் பணம்“

தன் மகளைப் பற்றி இப்படி வெளிப்படையாகவே விமரிசிக்கும் பெற்றோர்களை நான் சங்மாய் நகரில் தான் பார்த்தேன்.

துதான் சியாங்மாய் சுதாலக் கம்பெனி. உள்ளே போய்ப் பாருங்கள் என்று எங்களை ஓரிடத்தில் இறக்கிவிட்டு ஒரு ‘தம்’ பற்ற வைத்துக் கொண்டார் சொம்பட்.

56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/54&oldid=1075219" இலிருந்து மீள்விக்கப்பட்டது