பக்கம்:பாரதி லீலை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 பாரதியார் திருநெல்வேலி ஹிந்து கல்லூரியில் படித்தார். அப்பொழுது அவர் பற்பல புல்வர் களுடன் செய்த தமிழ்ப் போருக்கு அளவே 1897-ம் வருஷம் ஆனி மாதம் 15-ந் தேதி கடையம் பூரீ செல்லப்பா அய்யர் பெண் பூரீமதி செல்லம்மாளுக்கும் பாரதியாருக்கும் விவாகம் 5டகதது. கலியாணம்ஆகி ஒருவருஷம் கழிந்தது. பாரதி யாரின் தந்தையார் நோய் வாய்ப்பட்டு இறந்தார். அதனுல் பாரதியாருக்கு மிகுந்த கஷ்டமுண்டா யிற்று. மேலும் படிப்பதற்குவேண்டிய செளகரி யங்கள் இல்லாமற்போயின. திருநெல்வேலி ஹிந்துகலாசாலை பாரதியாரை மெட்ரிகுலேஷன் பரிசைடிக்கு அனுப்பவில்லை. மறுபடியும் மெட்ரிகுலேஷன் வகுப்பில் சேர்ந்து வாசிக்கச் செளகரியமில்லை. என்ன செய்வதென்று பாரதியார் யோசித்துக்கொண்டிருந்தார். இப்படியிருக்கையில் காசியிலே பாரதியாரின் ஷட்டகர் வசித்து வந்தார். கேதார கட்ட மடம் கிருஷ்ண சிவன் என்பது அவர்பெயர். காசிக்கு வருமாறு அவர் பாரதியாரை அழைத்தார். சரி' யென்று சொல்லிப் பாரதியாரும் காசிக்குப் போனுர். அது 1901-ம் வருஷம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/58&oldid=816578" இலிருந்து மீள்விக்கப்பட்டது