பக்கம்:ஊரார்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8? தோணுது: யாராவது ஒருத்தன மரியாதையா பலி கொடுத்துடவேண்டியதுதான். என்ன சொல்றிங்க சாமி?” என்று கேட்டான் வேதாசலம். "இன்னம் யாருக்காவது லெட்டர் வந்திருக்காமா?" "எனக்கு வந்திருக்கு, எனக்கு" என்று நாலைந்து பேர் சொன்னர்கள். "என்ன செய்யலாம் இப்போ? அதைச் சொல் லுங்க..." "நம்மிலே ஒருத்தன் பலியாக வேண்டியதுதான், வேறே எந்த வழியும் இல்லே. 'போலீசுக்குத் தகவல் கொடுத்தால் ஒருவேளே கெடுத லாகவும் முடியலாம். அதஞலே இந்த விசயத்தை நாமே போலீசுக்குத் தெரியாமல் தீர்த்துடறதுதான் நல்லது. இல் லேன்ன நம் எல்லோருக்குமே ஆபத்துதான்” என்ருன் வேதாசலம். "யாராவது ஒருத்தனை அனுப்பலேன்ன கொள்ளைக் கூட்டம் நம்மைச் சும்மா விடப் போறதில்லை, அவங்க எதுக்கும் துணிஞ்சவங்க. அதஞலே..." 韓愛یا }தளுலே..." "ஒருத்தன அனுப்பிடுவோம். "அந்த ஒருத்தன் யாரு? அது தெரியணுமே இப்ப அதுதான் கேள்வி... என்ருர் சாமியார். "நாங்க் எல்லாரும் பேசிட்டுதான் இங்கே வந்திருக் கோம். எங்களில் யாருமே அதுக்குத் தயாராயில்லை. ஊர் தப்பணும்ன அதுக்கு ஒரே வழி..." என்று அனைத்துக் கொண்டான் வேதாசலம், "என்ன அது?-சாமியார் கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/62&oldid=758748" இலிருந்து மீள்விக்கப்பட்டது